தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மறக்கமுடியாத அந்த முதலாம் சந்திப்பில் காதலர்கள் அறிமுகமாகும் போது..!

Go down

மறக்கமுடியாத அந்த முதலாம் சந்திப்பில் காதலர்கள் அறிமுகமாகும் போது..! Empty மறக்கமுடியாத அந்த முதலாம் சந்திப்பில் காதலர்கள் அறிமுகமாகும் போது..!

Post  meenu Sat Mar 16, 2013 4:55 pm


19


Love_proposal1நீங்கள் விரும்பும் பெண்ணுடன் முதன் முதலில் பேசப்போகிறீர்கள். என்ன பேசுவது? எப்படி ஆரம்பிப்பது? என்று குழப்பமாகத்தா ன் இருக்கும். முதல் சந்திப்பு!
1.முதல் சந்திப்பு ஒரு பரிட்சை மாதிரி!

முன்னெச்சரிக்கையாக என்ன பேசப்போகிறோம் என்று தெளிவாக தயாராக இருக்க வேண் டும். இதற்கு கொஞ்சம் ஹோம் வொர்க் செய்து தயாராக வேண்டி யது அவசியம்! சாதாரணமான கேள்விகளுக்கு சாதாரணமான பதில்கள் அவ்வளவு சுவையாக இருக்காது. சுவையான, தனித் தன்மையான பதில்களைத் தயார்செய்து கொள்ளுங்கள். அவை நிச்சயம் பெண்களைக் கவரும்!

2. மிக எளிமையான வழி என்னவென்றால் உங்க ஆளைப்பற்றியே அதிகம் பேசுங்கள். அவர்களைத்தான் இந்த பூமியே சுத்திவருது( நீங்க சுத்தி வருகிறீர்கள்!!!) என்பதுபோல் பேசினால் எந்தப் பெண்ணுக்குத்தான் பிடிக்காது!

3. நீங்கள் விரும்புவது கேள்விகளுக்கான பதில்கள் அல்ல. நெருக்கம்தான். ஆகையினால் கேள்விகள் உங்களுக்கு நெருக்கம் ஏற்படுத்துவது போல் அமையட்டும்.

4. அவர்கள் நிறையப் பேச சந்தர்ப்பம் அளிக்கும் கேள்விகளைக் கேளுங்கள். அவர்கள் சந்தோசமாகப் பேசினால் பாதி வெற்றிதான்.

5. அவர்களுக்கு உற்சாகம் அளிக்கு ம் விசயங்களைப் பேசுங்கள். அதையும் முகபாவங்களுடன் பேசினீர்கள் என்றால் உங்கள் உற்சாகம் அவர்களையும் தொற்றிக்கொள்ளும். உங்களை ஒரு உற்சாகமான மனிதராக நினைப்பார்கள்.

6. அவர்களைப் பாராட்டுங்கள். உங்கள் பேச்சில் வெளிப்படையாகத் தெரியாமல் பாராட்டைப் பின்னுங்கள். உங்கள் பேச்சு அவர்களை மெதுவாக தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதை உணரும் போது அவர்கள் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!!

7. தன்னம்பிக்கையுடன் பேசுங்கள். தயக்கம்,பயம் ஆகியவை இருக்கக் கூடாது.நீங்கள் பேசும் உறுதியான பேச்சு அவர்க ளை நிச்சயம் கவரும்.

8. கண்களைப் பார்த்துப் பேசுங்கள். உங்கள் பார்வை அவருடைய முகத்திலேயே இருக்கட்டும். அவரின் உடலின் வேறு பாகங்களில் பார்வை செல்வது அவர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும். அதே போல் அவர் முகத்தைப் பார்க்காமல் விட்டத்தையோ, சுற்று முற்றும் பார்ப்பதையோ பெண்கள் விரும்பமாட்டார்கள்.

9. கொஞ்சம் அன்றாடச்செய்திகளைத் தெரிந்து கொள்ளுங்கள். அன்றைய சுவரசியமான செய்தி பற்றி உங்கள் காதலி பேசும்போது ஒன்றும் தெரியாமல் சமாளிப்பது கஷ்டம்.

10. முதலில் பேசும்போது பேச ஒன்றுமில்லாத நேரம் ஒன்று ஏற்படுமாயின் நீங்களே சில சுவாரசியமான விசயங்களைப் பற்றிப் பேச ஆரம்பிக்கலாம். எடுத்துக் காட்டாக சுற்றுலா பற்றியோ, நீங்கள் செய்த வெளி நாட்டு வேலை பற்றியோ, உங்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவையான நிகழ்ச்சிகளை முன்கூட்டியே தயார்செய்து கொண்டு செல்லுங்கள். உற்சாகமாக நீங்கள் பேசும் நகைச்சுவைப் பேச்சு பெண்களை எளிதில் கவரும். அவளைச் சிரிக்க வைக்கும் கலையைக் கற்று விட்டீர்கள் என்றால் மேட்டர் ஈசிதான்!

11. அவளின் பொழுது போக்கு அம்சங்கள் பற்றிக் கேட்கவும். எல்லாப் பெண்களும் கட்டாயம் ஏதாவதொரு பொழுதுபோக்கு ஹாபி வைத்திருப்பார்கள். அதில் அதிக ஆர்வம் காட்டிப் பேசினால் உங்களை அவளுக்குப் பிடிக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா!

12. அவள் உங்களுடன் பேச வரும்போது என்ன உடை, நகை, கைப்பை அல்லது வித்தியாசமான சங்கிலி அல்லது வளையல் அணிந்து உள்ளார்கள் என்று நாசூக்காக கவனியுங்கள். அதைப் பற்றி புகழ்ந்து பேச நான் உங்களுக்கு சொல்லித்தரவேண்டுமா என்ன!

13. அதே போல் அப்போதயை பேசன் உடைக்கு மாறிவிடுங்கள்! பெண்களுக்கு நீட்டாக உடை அணிபவகளையே பிடிக்கும். அடிக்கடி குளிக்க வேண்டும். புதுப் புது சட்டைகளைப் போடவேண்டும். நல்ல செண்ட் அடித்துக்கொள்ள வேண்டும் என்பதெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை!

14.அவள் நாய்,பூனை என்று எதையாவது வளர்க்கிறார்களா என்று விசாரிக்கவும். வளர்த்தால் ரொம்ப சந்தோசம்..நம்ம பேச்சை வளர்க்கலாம்! ஒன்றும் வளர்க்கவில்லை யென்றாலும் சரிதான் .. ஏன் வளர்க் கவில்லை என்று கேட்டு பேச்சை வளர்க்கலாம்..
15. அவளின் குடும்பத்தில் உள்ள நபர்களைப் பற்றி, அண்ணன்கள், தம்பிகள் பற்றி விசாரித்து அறிந்து கொள்ளுங்கள். அவர்களிடம் உள்ள சிறப்பு அம்சங்களைப் பாராட்டிப்பேசுங்கள்.

16. இருவருக்கும் பொதுவான விசயங்கள் என்ன என்று துப்பறியுங்கள். அவளுடன் பேசும்போது அந்தப் பொதுவான விசயத்தை வெளிக்கொணருங்கள். எனக்கும் அது பிடிக்கும் என்று ஆரம்பிங்க!! இப்படி நாலைந்து பொதுவான விசய்ங்களைப் பிடித்துக் கொண்டுபேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது!!
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மறக்கமுடியாத அந்த முதல் சந்திப்பின் போது….
» நீச்சல் பயிற்சியின் போது எரிக்கப்படும் கலோரியின் அளவு நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது நமது உடல் எடை குறைவதுடன் கலோரியும் எரிக்கபடுகிறது. சராசரி ஆண் (ஆ) மற்றும் (பெ) ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது எரிக்கபடும் கலோரிகளின் அளவு கீழே
» மறக்கமுடியாத இரவுகள்
» தமிழ் மொழிப்பயிற்சி ஏடு - மேல்நிலை -முதலாம் ஆண்டு
» நடிகர் முரளியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum