தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஸ்வரூபம் படத்திற்கு தமிழகத்தில் வரவேற்பு: ரசிகர்களுக்கு கமல் நன்றி

Go down

விஸ்வரூபம் படத்திற்கு தமிழகத்தில் வரவேற்பு: ரசிகர்களுக்கு கமல் நன்றி Empty விஸ்வரூபம் படத்திற்கு தமிழகத்தில் வரவேற்பு: ரசிகர்களுக்கு கமல் நன்றி

Post  ishwarya Sat Mar 16, 2013 4:40 pm


பல்வேறு தடைகளைத் தாண்டி விஸ்வரூபம் திரைப்படம் தமிழகத்தில் திரைக்கு வந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து கமல் ஹாசன் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

விஸ்வரூபம் பட பிரச்சினையில் தீர்வு காண வழி வகுத்த தமிழக முதல்வருக்கும், அதற்கு துணையாக இருந்த ஊடகங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். விஸ்வரூபம் படத்திற்கு ரசிகர்கள் தந்த வரவேற்பு, என் மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பு, என்னை நெகிழ வைக்கிறது. இந்த அன்புக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. எஞ்சியிருக்கும் வாழ்நாளில் அதைச் செய்ய முடியுமா என்ற சந்தேகம் வருகிறது.

எனக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக, பல ரசிகர்கள் தங்கள் வீட்டு பத்திரங்கள், வீட்டு சாவிகள், காசோலைகள் அனுப்பியிருந்தார்கள். அந்த அன்பு என்னை நெகிழச் செய்தது. படத்துக்கான சக கலைஞர்களின் பாராட்டு புது உத்வேகத்தை கொடுத்திருக்கிறது.

விஸ்வரூபம் படத்திற்கு தமிழகம், புதுவை மற்றும் வெளிநாடுகளில் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எனினும் மலேசியா உள்ளிட்ட சில நாடுகளில் படம் வெளியிடப்படாதது வருத்தமளிக்கிறது. இப்படத்தின் 2-ம் பாகம் பணிகள் தொடங்கி விட்டன. திரைப்படங்களை தணிக்கை செய்வதில் ஒரே சீரான முறை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விஸ்வரூபம் படத்திற்கு தமிழகத்தில் வரவேற்பு: ரசிகர்களுக்கு கமல் நன்றி
» விஸ்வரூபம் வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கு நன்றி : கமல் நெகிழ்ச்சி
» தமிழகத்தில் திரையிட்டால் விஸ்வரூபம் படத்திற்கு பாதுகாப்பு அளிப்போம்: சிவசேனா அறிவிப்பு
» பிப். 7 தமிழகத்தில் விஸ்வரூபம் – கமல் அறிவி‌ப்பு!
» பிப். 7 தமிழகத்தில் விஸ்வரூபம் - கமல் அறிவி‌ப்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum