தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகர் சுந்தருடன் காதலா?- ஆண்ட்ரியா

Go down

நடிகர் சுந்தருடன் காதலா?- ஆண்ட்ரியா Empty நடிகர் சுந்தருடன் காதலா?- ஆண்ட்ரியா

Post  ishwarya Sat Mar 16, 2013 4:17 pm


நடிகை ஆண்ட்ரியாவும் மயக்கம் என்ன படத்தில் நடித்த சுந்தரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவியுள்ளன. ஏற்கனவே இதனை இருவரும் மறுத்தனர். ஆனாலும் ரகசியமாக இருவரும் தொடர்ந்து சந்தித்து வருவதாக தெலுங்கு பட உலகில் செய்தி பரவியுள்ளது.

இதுகுறித்து ஆண்ட்ரியாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

நடிகர் சுந்தருக்கும் எனக்கும் உள்ள தொடர்பு குறித்து பலமுறை விளக்கிவிட்டேன். சுந்தரை எனக்கு 10 ஆண்டுகள் தெரியும். இருவரும் நண்பர்கள். எங்களுக்குள் வேறு எதுவும் இல்லை. கமலுடன் விஸ்வரூபம் படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். அவர் ஒரு சகாப்தம். சினிமாவில் அவருக்கு தெரியாத விஷயங்களே இல்லை.

நான் நடித்த படங்களில் விஸ்வரூபம் சிறந்த படம். திறமையான தொழில் நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றினர். நான் அதிகம் பேசுவேன். ஆனால் படப்பிடிப்பில் கமல் முன்னால் பேச்சே வரவில்லை. அவர் சொல்வதை மட்டுமே கேட்டேன். அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்ளலாம்.

எல்லா நடிகைகளுக்கும் தேசிய விருது பெற வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். எனக்கும் அந்த ஆசை உண்டு. என்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் பரப்பப்படுகின்றன. யார் இதை கிளப்பி விடுகிறார்கள் என்று தெரியவில்லை. இதற்காக வருத்தப் படமாட்டேன். என்னைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும் என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum