இலியானா போல ஜில் என்ற அழகு பாதம் வேண்டுமா? சிம்பிள் டிப்ஸ்!
Page 1 of 1
இலியானா போல ஜில் என்ற அழகு பாதம் வேண்டுமா? சிம்பிள் டிப்ஸ்!
• தினமும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு சுடுதண்ணீரில், உப்பு, சிறிதளவு எலுமிச்சைச்சாறு, கலந்து பாதங்களை அதில் 10 முதல் 15 நிமிடம் வைத்து பிறகு பிரஷ்சினால் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு பாதங்களை மெல்லிய டவலால் துடைத்து நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து காலில் தடவலாம். இதை வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்களுக்குச் செய்யலாம்.
• வெடிப்பு பாதம் உள்ளவர்கள் வீட்டில் உள்ள மருதாணி தூள் அல்லது மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் வெடிப்பு நீங்கும்.
• பாதவிரல்கள் அழுக்காக இருந்தால் எலுமிச்சை பழச்சாறு தடவி வரலாம்.
• நம் நகத்தில் டார்க் கலர் பாலிஷ் போடுவதால் நம் நகங்கள் மஞ்சளாக மாறி விடும். அதனால் பாலிஷ் போடுவதற்கு முன் நெயில் பேஸ் போட்டு பாலிஷ் போட வேண்டும். இப்படி செய்து வந்தால் நம் நகங்களை அழகாக பராமரித்துக் கொள்ளலாம்.
• பாதம் வீங்கி வலி இருந்தால் ஒரு முழு செங்கல்லை அடுப்பில் சூடு செய்து அதன் மேல் எருக்கு இலைகளை வைத்து இதமான சூட்டில் பாதங்களை வைத்து எடுக்க வேண்டும். இதை தொடர்ந்து 2 அல்லது 3 நிமிடத்திற்கு செய்து வந்தால் பாதத்தின் வலி நீங்கும்.
• கல் உப்பு, இடித்த மிளகு இரண்டையும் சிறு மூட்டைகளாகக்கட்டி சூடாக்க வேண்டும். பாதத்தில் எங்கு வலி இருக்கிறதோ அங்கு வைத்து எடுக்க வேண்டும். இதன்படி செய்து வந்தால் கால்வலி நீங்கும்.
• பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால் பீர்க்கங்காய் நார் கொண்டு தினமும் குளிக்கும்போது பாதத்தில் நன்றாக தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும்.
• கால் விரல்களில் நகச்சுத்தி வந்தால் இதை சரியாக்க எலுமிச்சைப்பழத்துடன், மஞ்சள் தேய்த்து பத்துப்போட்டு வந்தால் நகச்சுத்தி போய் விடும்.
• கால் விரல் நகத்தின் ஓரத்தில் மண் சேர்ந்து விட்டால் நல்லெண்ணையை ஒரு விளக்கில் ஏற்றி வைத்து ஒரு தீக்குச்சியை அந்த நல்லெண்ணெயில் வைத்து அந்த விளக்கின் திரியில் சூடு செய்து அந்த விரல் நகத்தின் ஓரங்களில் தடவவும். 1 அல்லது 2 முறை செய்தபின் அதில் உள்ள அழுக்கு எல்லாம் வந்து விடும்.
• நகத்தின் ஓரங்களில் பின் வைத்து சுத்தம் செய்ய கூடாது.இவ்வாறு செய்து வந்தால் பாதத்தின் அழகு குறையும். இது போன்ற பிரச்சினைகளை வராமல் தடுக்க பாதங்களை சரியாக பராமரிக்க வேண்டும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முகப் பொலிவுற சிம்பிள் டிப்ஸ்!
» பித்த வெடிப்பு :- மென்மையான பாதம் வேண்டுமா?
» அழகான பாதம் வேண்டுமா?
» பாதம் அழகு பெற உடற்பயிற்சி
» பாதம் அழகு பெற உடற்பயிற்சி
» பித்த வெடிப்பு :- மென்மையான பாதம் வேண்டுமா?
» அழகான பாதம் வேண்டுமா?
» பாதம் அழகு பெற உடற்பயிற்சி
» பாதம் அழகு பெற உடற்பயிற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum