உண்மைக்கு புறம்பாக பேசாதீர்!
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
உண்மைக்கு புறம்பாக பேசாதீர்!
நல்ல செயல்களைச் செய்ய வேண்டும். கோபம் என்னும் தீயை அணைத்து விட வேண்டும். இல்லாதவர்களுக்கு செய்யும் உதவிகளைத் தடுப்பது கூடாது. தன்னிடம் சிறப்பாக உள்ளவற்றை பிறருக்குத் தெரியப்படுத்தும் நோக்கத்தில் தானே வலியச் சென்று சொல்லக்கூடாது. நல்ல செயல்களைச் செய்வதில் உள்ள ஆர்வத்தை தளரவிடக் கூடாது. ஒருவரிடம் தனக்கு உதவவேண்டும் என்று யாசிப்பது கூடாது. உலகியல் நடைமுறைக்கு ஏற்ப உதவி செய்யும் உயர்ந்த குணத்தோடு வாழ வேண்டும். கற்க வேண்டியவைகளைத் தேடி நாள்தோறும் கற்றுக் கொண்டேயிருத்தல் வேண்டும். பிறருடைய வாழ்க்கை முன்னேற்றத்தைப் பற்றிப் பொறாமையால் தவறாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.விளைபொருள்களை அளக்கும்போது குறைத்து அளத்தல் கூடாது. கண்ணால் கண்டதை மாற்றி உண்மைக்குப் புறம்பாக வேறு ஒன்றாகச் சொல்லக்கூடாது. கேட்பவர்களுக்கு இனிமை ஏற்படும் வகையில் நயமாகப் பேச வேண்டும். பெற்றோர்களான தாயும் தந்தையும் போற்றிப் பாதுகாக்க வேண்டும். பயனை எதிர்பாராமல் பிறர் செய்த உதவியை எந்த நிலையிலும் எந்தக் காலத்திலும் மறப்பது கூடாது. மற்றவர்களுக்குச் சொந்தமான நிலத்தைக் கையகப்படுத்தி அதன் பயனை உண்டுவாழ்தல் கூடாது.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» பிறரை பழித்துப் பேசாதீர்
» உண்மைக்கு வெற்றி
» சோனியா மீது குற்றம் சாட்டுவது உண்மைக்கு புறம்பானது: சுஷ்மாவுக்கு ரேணுகா பதில்
» உண்மைக்கு வெற்றி
» சோனியா மீது குற்றம் சாட்டுவது உண்மைக்கு புறம்பானது: சுஷ்மாவுக்கு ரேணுகா பதில்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum