தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சந்தானத்துக்கு பெண் பார்க்க சென்ற பாஸ்

Go down

சந்தானத்துக்கு பெண் பார்க்க சென்ற பாஸ் Empty சந்தானத்துக்கு பெண் பார்க்க சென்ற பாஸ்

Post  ishwarya Sat Mar 16, 2013 2:20 pm

புளூ ஓசன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் பி. சித்திரைச்செல்வன் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் ‘தலைவன்’. திரைப்பட கல்லூரி மாணவர் ரமேஷ் செல்வன் இயக்கும் இந்தப் படத்தில், புதுமுகம் பாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிகிஷா படேல் நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் சந்தானம் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் உள்ள மிலிட்டேன் பகுதியில் நடைபெற்றது. சந்தானம் ஒரு பெண்ணை விரும்புகிறார். அவளை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார். இதை பாஸிடம் சொல்ல, அவரும் பெண் பார்க்க உடன் செல்கிறார். அந்த பெண்ணின் தந்தை, தனது இரண்டு மகனுக்கும் திருமணம் செய்த பிறகே மகளை திருமணம் செய்து கொடுப்பேன் என்று உறுதியாக சொல்லிவிடுகிறார்.

இதனால், இரண்டு பேருக்கும் பெண் தேடி இருவரும் அலைகின்றனர். ஒவ்வொரு பெண்ணை பார்க்கும்போதும் பிரச்சனை மேல் பிரச்சனை வருகிறது. இதனால் அவர்கள் படும் கஷ்டதை கலகலப்பாக படமாக்கி இருக்கிறார் இயக்குனர் ரமேஷ் செல்வன்.

படம் பற்றி இயக்குனர் ரமேஷ்செல்வன் கூறும்போது, ‘இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகி உள்ளது. அதில் காமெடியும் முக்கிய அம்சமாக இடம் பெறுகிறது. படத்தில் பாஸ் – சந்தானம் விடிவி கணேஷ் அடிக்கும் காமெடி கலாட்டா கொஞ்ச நஞ்சமல்ல. அது வயிறு குலுங்க சிரிக்க வைக்கிற காட்சிகளாக இடம் பெறுகிறது. டிராக் மாதிரி காமெடி இல்லாமல் கதையோடு சேர்ந்து வருகிறது.

பாஸ் சினிமாவுக்கு புதுமுகம். இருந்தாலும் பத்து பதினைந்து படங்களில் நடித்த அனுபவம் உள்ளவர்போல நடித்து அசத்திருக்கிறார். காமெடி காட்சிகளில் அவர் சந்தானத்துடன் இணைந்து நடிக்கிறபோது அவ்வளவு இயல்பாக, டைமிங் சென்சோட நடித்து பிரமாதபடுத்தியிருக்கிறார்.

இநத படத்தில் காமெடி, சென்டிமெண்ட், எமோசன், ஆக்ஷன் எல்லாம் அளவாக ரசிக்கும்படி அமைந்துள்ளது. இதுவரை பார்த்திராத சண்டை காட்சிகள் இந்த படத்தில் இருக்கும். சண்டை காட்சிக்காக பாஸ் ரொம்ப கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். படம் நல்லா வரணும் என்பதற்காக டூப் போடாமல் அவரே நடிச்சு நிறைய காயம் பட்டிருக்கிறார். அந்த அளவிற்கு ஈடுபாட்டோடு நடித்திருக்கிறார்.

படம் ரொம்ப ஃபாஸ்ட்டா, படு ஸ்பீடா போகும். நான் என்னுடைய முந்தைய படங்களில் தேசிய அளவில் உள்ள பிரச்சனைகளை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறேன். இந்த படமும் அது மாதிரி கதை அம்சம் இருந்தாலும், இதுவரை யோசித்திராத ஒரு சம்பவத்தை சொல்கிறேன். தவறு செய்பவன் திருந்தனும். தவறு செய்தவனுக்கு தண்டனையும் கிடைக்கணும். அதை அழுத்தமாக சொல்கிறேன்.

இவ்வாறு இயக்குனர் ரமேஷ் செல்வன் கூறினார்.

இந்தப் படத்தில் பாஸ், நிகிஷா படேல், சந்தானம், கோவை சரளா, மோனிகா, சுமன், ஜெயப்பிரகாஷ், கோட்டா சீனிவாச ராவ், வின்சென்ட் அசோகன், அபிஷேக், வி.டி.வி. கணேஷ், சுமன் ஷெட்டி, மனோபாலா, சந்தனபாரதி, டி.பி.கஜேந்த்ரன், வாசுவிக்ரம், சுரேஷ் கிருஷ்ணா, ஓ.ஏ.கே. சுந்தர், சுப்புராஜ், மீரா கிருஷ்ணன் உட்பட பலர் நடித்துள்ளனர்

எஸ்.கே.பூபதி ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எடிட்டிங் செய்துள்ளார். வித்யாசாகர் இசை அமைக்க, பாடல்களை அறிவுமதி, நா.முத்துக்குமார், யுகபாரதி ஆகியோர் எழுதி உள்ளனர். பிருந்தா, தினேஷ், சங்கர். ஆகியோர் நடனம் அமைத்துள்ளனர்.

சண்டை பயிற்சி - சூப்பர் சுப்பராயன். கதை வசனம் - முகமது ஜாஃபர், காலை இயக்கம் – சண்முகம், தயாரிப்பு நிர்வாகம் – ரவி கே சிவசங்கர்.

சென்னை, ஐதராபாத், கோவா, டார்ஜிலிங், சிக்கிம், கொல்கத்தா போன்ற நகரங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum