தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் மகனும் சினிமாவில் நடிக்கிறார்: குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்

Go down

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் மகனும் சினிமாவில் நடிக்கிறார்: குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் Empty தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் மகனும் சினிமாவில் நடிக்கிறார்: குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்

Post  ishwarya Sat Mar 16, 2013 2:06 pm

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு. இவர் சென்னை லயோலா கல்லூரியில் படித்தவர். தெலுங்கில் நிறைய ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார்.

மகேஷ் பாபுவுக்கும் இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்த நம்ரதாவுக்கும் 2005-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கவுதம் கிருஷ்ணா, காட்டாமனேனி என இரு குழந்தைகள் உள்ளனர்.

இதில் கவுதம் கிருஷ்ணாவை குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகபடுத்துகிறார் மகேஷ்பாபு. கவுதம் கிருஷ்ணாவுக்கு 7 வயது ஆகிறது. சுகுமார் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்க உள்ள புதுபடத்தில் கவுதம் நடிக்கிறார். இதற்தாக கவுதத்துக்கு நடிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

மகேஷ் பாபுவும் தனது தந்தையுடன் ‘நேடா’ படத்தில் 1979-ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகித்தான் கதாநாயகனாக உயர்ந்தார். அதுபோல் தனது மகனையும் சினிமாவுக்கு கொண்டு வருகிறார். இதுகுறித்து நம்ரதாவிடம் கேட்டபோது இயக்குனரும் தயாரிப்பாளரும் கவுதத்திடம் நடிக்கும்படி பேசி சம்மதிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum