தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

'நம்பர் ஒன்' இடத்துக்கு போட்டி: நயன்தாரா-ஹன்சிகா மோதல்?

Go down

'நம்பர் ஒன்' இடத்துக்கு போட்டி: நயன்தாரா-ஹன்சிகா மோதல்? Empty 'நம்பர் ஒன்' இடத்துக்கு போட்டி: நயன்தாரா-ஹன்சிகா மோதல்?

Post  ishwarya Sat Mar 16, 2013 1:06 pm


நயன்தாரா-ஹன்சிகா இடையே “நம்பர் ஒன்” இடத்துக்கு போட்டி நிலவுகிறது.

இதுவரை நயன்தாராவே முதல் இடத்தில் இருக்கிறார். புதிதாக வந்துள்ள ஹன்சிகா வேகமாக நயன்தாரா இடத்துக்கு முன்னேறுகிறார்.

நயன்தாரா 2005-ல் “அய்யா” படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பிறகு ரஜினியுடன் சந்திரமுகியில் ஜோடியானார். மூன்றாவதாக சூர்யாவுடன் நடித்த கஜினி, விஜயுடன் சிவகாசி படங்களும் ஹிட்டாகி உச்சத்துக்கு போனார். “யாரடி நீ மோகினி”, “ஆதவன்”, “பாஸ் என்கிற பாஸ்கரன்” என அவரது வெற்றிப் படங்கள் பட்டியல் தொடர்கிறது. தெலுங்கு, மலையாள திரையுலகிலும் முன்னணி நடிகையாக உள்ளார். சம்பளம் ரூ.1 1/2 கோடியை தாண்டியுள்ளது என்கின்றனர். காதல் சர்ச்சைகள் இடையில் சிறிது பின்னடைவு ஏற்படுத்தினாலும் முதல் இடத்தை தொடர்ந்து தக்க வைத்துள்ளார்.

இந்த நிலையில்தான் ஹன்சிகா திடீர் போட்டியாக வந்து நிற்கிறார். நயன்தாரா இடத்தை அவர் தட்டிப் பறிப்பார் என்கின்றனர்.

ஹன்சிகா “மாப்பிள்ளை” “எங்கேயும் காதல்” படங்கள் மூலம் தமிழுக்கு வந்தார். “வேலாயுதம்”, “ஒரு கல் ஒரு கண்ணாடி” படங்கள் மேலும் பிரபலப்படுத்தின.

தற்போது “சேட்டை” “வாலு”, “வேட்டை மன்னன்”, “சிங்கம்-2”, “பிரியாணி”, “தீயா வேலை செய்யனும்”, “குமாரு”, “வாலிபன்” என ஏழு படங்கள் கைவசம் உள்ளன. இது நயன்தாரா நடித்துக்கொண்டிருக்கும் படங்களைவிட அதிகம்.

அத்துடன் சிம்பு ஜோடியாக இரு படங்களில் ஹன்சிகா நடிப்பது நயன்தாராவுக்கு அவர்மேல் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளதாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum