தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வினய் இரட்டை வேடத்தில் கலக்கும் ‘செந்தட்டி காளை செவத்த காளை’

Go down

வினய் இரட்டை வேடத்தில் கலக்கும் ‘செந்தட்டி காளை செவத்த காளை’ Empty வினய் இரட்டை வேடத்தில் கலக்கும் ‘செந்தட்டி காளை செவத்த காளை’

Post  ishwarya Sat Mar 16, 2013 1:03 pm

காதல் மன்னன், அமர்க்களம், ஜெமினி, அட்டகாசம், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்., ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் சரண். தற்போது ‘செந்தட்டி காளை செவத்த காளை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நாயகனாக வினய் நடிக்கிறார்.

முதன்முதலாக இப்படத்தில் வினய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சாமுத்ரிகா, காம்பாரி, ஷில்பி வர்மா என மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். ‘கும்கி’யில் போலீஸ் வில்லனாக மிரட்டிய ஸ்ரீஷித் ரவி இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். மேலும், இளவரசு, ‘அவன்-இவன்’ ராம்ராஜ், சானா, ரித்திகா உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நடிக்கின்றனர்.

திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியை மையப்படுத்தி இப்படத்தை இயக்கி வருகிறார் சரண். சில காட்சிகளை மும்பை மற்றும் ஹாங்காங்கில் படமாக்கியுள்ளனர்.

இப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைக்கிறார். இது இவரது 75-வது படமாகும். வேகா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் விக்ரம் ராஜ் இப்படத்தை தயாரிக்கிறார்.

திருநெல்வேலி பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum