கள்ள காதலனுடன் கைக்குழந்தையோடு ஓடிய இளம்பெண்!
Page 1 of 1
கள்ள காதலனுடன் கைக்குழந்தையோடு ஓடிய இளம்பெண்!
கள்ளக்காதலன் மீது கொண்ட மோகத்தால், தனது கைக்குழந்தையோடு வீட்டைவிட்டு ஓடிய சம்பவம் கொருக்குப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது…
கொருக்குப்பேட்டை திருநாவுக்கரசு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக், இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 1 1/2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனலட்சுமி திடீரென குழந்தையுடன் காணாமல்போனார். பல்வேறு இடங்களில் தேடியும் மனைவியை கண்டுபிடிக்க முடியாததால் கார்த்திக் கொருக்குப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
பொலீஸ் விசாரணையின் போது தனலட்சுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த மதன் என்ற வாலிபருடன் பழக்கம் இருந்தது தெரிய வந்தது. 2 பேரும் வீட்டை விட்டு ஓடி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது தனலட்சுமியும், மதனும் திருவள்ளூரில் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் 2 பேரையும் மீட்டு கொருக்குப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
தனலட்சுமியிடம் பெண் போலீசார் விசாரணை நடத்தினர். கணவருடன் செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர் இதற்கு மறுப்பு தெரிவித்தார். எனது கணவருடன் செல்வதற்கு நான் விரும்பவில்லை என்று உறுதியாக கூறி விட்டார்.
இதையடுத்து தனலட்சுமியை மயிலாப்பூரில் உள்ள காப்பகத்துக்கு கைக்குழந்தையுடன் அனுப்பி வைக்கப்பட்டார். காதலன் மதன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இரவு காதலனுடன் லாட்ஜுக்கு சென்ற இளம்பெண் சடலமாக மீட்பு! – படம் இணைப்பு!
» வடிவேலுவின் இம்சைக்கு பயந்து ஓடிய இயக்குனர்
» பாலா படம் - பதறி ஓடிய பவர் ஸ்டார்
» 18 வயது மாணவனுடன் ஓடிய திருமணமான நர்ஸ்! (படம் இணைப்பு)
» தென்னாபிரிக்காவில் இளம்பெண் உறுப்பு அறுக்கப்பட்டு படுகொலை!
» வடிவேலுவின் இம்சைக்கு பயந்து ஓடிய இயக்குனர்
» பாலா படம் - பதறி ஓடிய பவர் ஸ்டார்
» 18 வயது மாணவனுடன் ஓடிய திருமணமான நர்ஸ்! (படம் இணைப்பு)
» தென்னாபிரிக்காவில் இளம்பெண் உறுப்பு அறுக்கப்பட்டு படுகொலை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum