திருப்பதியில் நடிகை தமன்னா சுடிதாரில் வழிபட்டார்: ஜீன்ஸ்- டீசர்ட்டில் வந்ததை பக்தர்கள் எதிர்த்ததால் ஆடை மாற்றம்
Page 1 of 1
திருப்பதியில் நடிகை தமன்னா சுடிதாரில் வழிபட்டார்: ஜீன்ஸ்- டீசர்ட்டில் வந்ததை பக்தர்கள் எதிர்த்ததால் ஆடை மாற்றம்
நடிகை தமன்னா கடந்த வருடம் திருப்பதி கோவிலுக்கு ஜீன்ஸ் பேண்ட், டீசர்ட் அணிந்து போய் வழிபட்டார்.
இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாரம்பரிய உடையில் வராமல் கவர்ச்சி உடையில் வருவதா? என்றும் கண்டித்தனர். தமன்னாவை கோவிலுக்குள் அனுமதித்த திருப்பதி தேவஸ்தான ஊழியர்களும், விமர்சனத்துக்கு ஆளானார்கள்.
இந்தநிலையில் நேற்று திடீரென தமன்னா திருப்பதி கோவிலுக்கு வந்தார். அவர் வந்த தகவல் அறிந்ததும் பக்தர்களும், ரசிகர்களும் சூழ்ந்தார்கள். ஜீன்ஸ் பேன்ட்டில் வந்தால் கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது என்று முடிவில் தேவஸ்தான ஊழியர்களும் விரைந்தார்கள்.
ஆனால் தமன்னா காரில் இருந்து சுடிதார் உடையில் இறங்கினார். நேராக கோவிலுக்குள் சென்று பயக்தியுடன் சாமி கும்பிட்டனர். லட்டு மற்றும் கோவில் பிரசாதங்களை பையில் வாங்கிக் கொண்டு வெளியே வந்த அவரை சுற்றி ரசிகர்கள் மீண்டும் முற்றுகையிட்டனர். ஆட்டோ கிராப் கேட்டார்கள். ஆனால் சிரித்தபடியே காரில் ஏறி புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» திருப்பதியில் ஜீன்ஸ், டீ சர்ட்டில் தரிசனம்: நடிகை தமன்னாவுக்கு பக்தர்கள் எதிர்ப்பு
» ஜீன்ஸ் - டி சர்ட்டுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் சுடிதாரில் வந்து ஏழுமலையானை தரிசித்த தமன்னா!
» ஜீன்ஸ், டீ சர்ட்டில் திருப்பதியில் சாமி கும்பிட்டது ஏன்?: தமன்னா விளக்கம்
» திருப்பதியில் தேரோட்டம் : பக்தர்கள் பரவசம்
» நடிகை தமன்னா மீது தயாரிப்பாளர்கள் புகார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum