தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிறுவர் இல்லமொன்றில் 15 சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த இருவர் கைது!

Go down

செய்த -  சிறுவர் இல்லமொன்றில் 15 சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த இருவர் கைது! Empty சிறுவர் இல்லமொன்றில் 15 சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த இருவர் கைது!

Post  meenu Sat Mar 16, 2013 12:23 pm

சிறுவர் இல்லமொன்றில் 15 சிறுமிகளை பல்வேறு வகையில் பாலியல் வன்புணர்ந்த குற்றச்சாட்டில் இருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

கேகாலை மாவட்டம், மாவனெல்ல பிரதேசத்திலுள்ள சிறுவர் இல்லம் ஒன்றின் பொறுப்பாளரும், பிரதான நிர்வாகியுமே இவ்வாறு கைதாகியுள்ளனர்.

சிறுவர் இல்லத்தில் இருந்த 5 சிறுமிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய சிறுமிகள் கேகாலை பிரதேசத்தில் உள்ள வேறு சிறுவர் இல்லங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்தச் சிறுவர் இல்லத்தின் பொறுப்பதிகாரி 87 வயதான முன்னாள் தோட்ட அத்தியட்சகர் என காவற்துறையினர் கூறியுள்ளனர்.

பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், இந்த நபர் மாவனெல்ல பிரதேசத்தில் சிறுவர் இல்லம் ஒன்றை ஆரம்பித்து நடத்தி வந்துள்ளார்.

இந்த சிறுவர் இல்லத்தை சிறுவர் காப்பக அதிகாரிகள் சோதனையிட்ட போதே, அங்குள்ள சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கேகாலை காவல்துறையினருக்கு முறையிடப்பட்டபின்னர் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சிறுவர் இல்லத்தில் இருந்த சிறுமிகள் அனைவரும் 15 வயதுக்கும் குறைவானவர் எனவும் அவர்கள் அனைவரும் விசேட மருத்துவப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட உள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர்
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» 13 வயது அநாதை சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த காம கொடூரர்கள் கைது!
» சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்த யுவதி!
» பாலியல் துஷ்பிரயோகத்தின் பின் 29 வயது பெண் கொலை: இருவர் கைது
» பெண்ணை கடத்தி 3 நாட்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!
»  Published On: Fri, Mar 8th, 2013 இந்தியா / சமுதாய சீர்கேடுகள் | By admin 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கிழடு கைது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum