பாலியல் பலாத்கார தொல்லைகளில் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்: திரிஷா
Page 1 of 1
பாலியல் பலாத்கார தொல்லைகளில் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்: திரிஷா
மகளிர் தினத்தையொட்டி நடிகை திரிஷா அளித்த பேட்டி வருமாறு:-
சமூகத்தில் பெண்களை பாதிக்கிற விஷயங்கள் நிறைய உள்ளன. பெண் சிசு கொலை, பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் பலாத்காரம் போன்றவை முக்கிய பிரச்சினைகளாக உள்ளன. இது போன்ற செய்திகள் அன்றாடம் வந்த வண்ணம் உள்ளன.
இதற்கு முடிவு கட்டி பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அவசியம். இதற்காக சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். மேல் மட்டத்தில் இருந்து இதற்கான மாற்றங்கள் உருவாக வேண்டும்.
கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுவோருக்கு உடனடியாக தண்டனை வழங்கும்படி சட்டம் கொண்டு வர வேண்டும். நடிகைகள் குஷ்பு, ராதிகா போன்றோர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்திருப்பது சந்தோஷமான விஷயம். அரசியலில் ஈடுபடுவது தவறானது அல்ல. அரசியலுக்கு வரவேண்டு மென்றால் மக்கள் அபிமானியாக இருக்க வேண்டும். ஆனால் நான் அப்படி இல்லை. பிராணிகளை பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறேன்.
நிறைய பேர் என்னிடம் தொடர்பு கொண்டு பேசி தங்களுக்கும் அது போன்ற ஆர்வம் இருப்பதாக தெரிவிக்கின்றனர். இது சந்தோஷமாக இருக்கிறது. சினிமாவில் நான் பத்து வருடமாக இருக்கிறேன். இப்போது தான் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் உள்ள படங்களை எடுக்க ஆரம்பித்து உள்ளனர். அதற்கான மாற்றம் முளைக்க துவங்கியுள்ளது.
ஆனாலும் ஹீரோவை வைத்துதான் படங்கள் வியாபாரம் ஆகிறது. அதனால் தான் அவர்கள் கூடுதல் சம்பளம் வாங்குகின்றனர். நான் நடித்த படங்களில் அபியும் நானும், விண்ணைத்தாண்டி வருவாயா படங்கள் என் கேரக்டருக்கு முக்கியத்துவம் அளிப்பவையாக இருந்தன. என்னைப் பற்றி நிறைய கிசு கிசுக்கள் வருகின்றன. அவற்றை பொருட்படுத்துவது இல்லை.
எதிர்காலத்தில் சமூக சேவை பணிகளில் ஈடுபட ஆர்வம் உள்ளது. உதவும் கரங்கள் அமைப்பில் இருந்து இரண்டு குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கிறேன். தகுதியான மாப்பிள்ளை கிடைக்கும் போது திருமணம் செய்து கொள்வேன்.
இவ்வாறு திரிஷா கூறினார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாக்க பெண்களுக்கு நவீன உள்ளாடை
» படமானது டெல்லி மாணவி பாலியல் பலாத்கார சம்பவம்
» சோனா பாலியல் பலாத்கார வழக்கு: எஸ்.பி.பி.சரணுக்கு 2 வாரம் இடைக்கால முன்ஜாமீன்
» பாலியல் பலாத்கார வழக்கில் அதிரடி தீர்ப்பு: மாஜி போலீஸ்காரருக்கு 10 ஆண்டு சிறை!
» பங்குனி உத்திரத்திற்கு முந்தைய நாளில் இருந்து விரதமாக இருந்து நமது குலக்கோவில்களுக்கு சென்று வழிபட வேண்டும். நம்மால் ஆன உதவியை வயதானவர்களுக்கு செய்வதன் மூலம் பெரியவர்களின் பரி பூரண ஆசிகள் நம்மை வாழ வைக்கும். தெய்வத்திருமணங்களை தரிசிப்பதே நம் வீட்டில் மங்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum