வற்றல் குழம்பு
Page 1 of 1
வற்றல் குழம்பு
தேவையான பொருள்கள்:
புளி = எலுமிச்சை அளவு
மிளகாய் வற்றல் = 8
தனியா பொடி = 3 ஸ்பூன்
தேங்காய் துருவல் = 3 ஸ்பூன்
வெங்காயம் = 2
தக்காளி = 2
சீரகம் = அரை ஸ்பூன்
கடுகு = அரை ஸ்பூன்
எண்ணெய் = 4 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
புளியை தேவையான அளவு தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.மிளகாயை இரண்டிரண்டாகக் கிள்ளி விதைகளை உதிர்த்து விட்டு சிறிது ஊற விட்டு
தேங்காயோடு அரைத்து புளித்தண்ணீரில் கலக்கவும்.
உப்பு, தனியா பொடி, மஞ்சள் பொடி கலக்கவும். தக்காளி, வெங்காயம் தனி தனியாக நறுக்கவும்.
சிறிது எண்ணெயில் வெங்காயம், தக்காளி வதக்கி அதனோடு குழம்பை சேர்த்துக் கொதிக்க விடவும். மூடி வைத்துக் கொதிக்க விட வேண்டும்.
கொதித்ததும் மீதி எண்ணெயில் சீரகம், கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும். கொத்தமல்லி சேர்க்கவும்.
சுவையான வற்றல் குழம்பு தயார். இதை ரைஸ், இட்லி, தோசை, பொங்கல், உப்புமா போன்றவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
புளியில் கலோரி, புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், ஃபைபர், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் A, வைட்டமின் B1, வைட்டமின் B2 ஆகியவை காணப்படுகிறது. மலச்சிக்கல் மற்றும் காய்ச்சல் குறையும்.
இது பித்தம், வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுக்கடுப்பு, வெள்ளைப்படுதல், சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள் குறையும். வீக்கம், தொண்டை புண், அம்மை நோய் ஆகியவை குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum