காராகருணை வறுவல்
Page 1 of 1
காராகருணை வறுவல்
தேவையான பொருள்கள்:
காராகருணை = அரை கிலோ
மிளகாய் வற்றல் = 6
வெங்காயம் = 2
பூண்டு = 10 பல்
தேங்காய் = கால் மூடி
சோம்பு = 1 ஸ்பூன்
எலுமிச்சைச்சாறு = அரை ஸ்பூன்
எண்ணெய் = அரை கரண்டி
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
காராகருணையை தோல் சீவி விட்டு பின் மெல்லிய ஓரங்குல வில்லைகளாக நறுக்கவும். இதை கழுநீரில் கழுவிப் பிழிந்து எலுமிச்சைச்சாறு கலந்து வைக்கவும். வெங்காயம் நறுக்கவும். பூண்டு உரித்துக் கொள்ளவும். தேங்காய் துருவிக் கொள்ளவும்.
தேங்காய், சோம்பு, மிளகாய் வற்றல் அரைத்துக் கொண்டு வெங்காயம், பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வெங்காயம்ம, பூண்டு நன்கு மசிய வேண்டும் என்ற அவசியம் இல்லை.
இவை எல்லாவற்றையும் வாணலியில் ஒன்றாகக் கலந்து எண்ணெய், உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊற விட்டு கறிவேப்பிலை சேர்த்து வேக விடவும்.
முதலில் 5 நிமிடம் தீயை கூட்டி வைத்து அடுத்த 5 நிமிடம் தீயை குறைத்து வைத்துக் கிளறி விடவும். இதை அடிக்கடி கிளற வேண்டும். இல்லாவிட்டால் அடி பிடித்து விடும். நன்றாக கிழங்கு வெந்து சுருண்டு எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி வைக்கவும்.
சுவையான காராகருணை வறுவல் தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
காராகருணை கிழங்கு ஒரு குறைந்த கொழுப்பு உணவு. நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே அது கொழுப்பின் அளவை குறைக்கிறது. உடல் எடை, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவற்றை குறைக்கும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum