பலாப்பழ பாயசம்
Page 1 of 1
பலாப்பழ பாயசம்
தேவையான பொருட்கள்:
பலாப்பழம் – 1 கப் (விதை நீக்கி பொடியாக நறுக்கியது)
பேரீச்சம் பழம் – 1 கப் (விதை நீக்கியது)
தேங்காய் பால் – 2 கப்
ஊறவைத்த அவல் – 1 கப்
முந்திரி பருப்பு – 1 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்
நெய் – கால் டீஸ்பூன்
செய்முறை:
பேரீச்சம் பழத்தை விதையை நீக்கி இருபது நிமிடம் ஊறவைக்கவேண்டும். அவலை தனியாக இருபது நிமிடம் ஊற வைக்கவேண்டும். பலா பழத்தை விதையை நீக்கி தேங்காய் பாலுடன் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவேண்டும். பேரீச்சம் பழத்தை தனியாக அரைத்துக் கொள்ளவேண்டும். அவலுடன், பலாபழம், தேங்காய்பால் சேர்ந்த கலவை, அரைத்த பேரீச்சம் பழம் ஆகியவற்றுடன் முந்திரி பருப்பு, ஏலக்காய் பொடி, நெய் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும். இப்பொழுது சத்து நிறைந்த பலாப்பழ பாயசம் ரெடி. இனிப்பு அதிகமாக தேவை என்றால் தேன் சேர்த்துக் கொள்ளலாம்.
மருத்துவக் குணங்கள்:
பலாப்பழத்தில் புரதச்சத்துக்களும், மாவுச்சத்துக்களும், வைட்டமின்களும் அதிகம் காணப்படுகின்றன. ஏ, சி மற்றும் சில பி வைட்டமின்களும் உள்ளன. இதை தவிர கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட கனிமப் பொருட்களும் அடங்கி உள்ளது.
பலாப்பழத்தில் வைட்டமின் ஏ உயிர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது உடலுக்கும், மூளைக்கும் வலுவை அளிக்கும்.
மேல் தோலை மிருதுவாகவும், வழவழப்பாகவும் செய்யும், நரம்புகளுக்கு உறுதி தரும். ரத்தத்தை விருத்தியாக்கும், பல் தொடர்பான நோய்களைப்
போக்கும் ஆற்றலும் பலாப்பழத்திற்கு உள்ளது.
தொற்றுக் கிருமிகளை அழிக்கும் சக்தி பலாப்பழத்திற்கு உண்டு.
பேரீச்சம் பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம் சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.
பேரீச்சம் பழம் கண் பார்வைக் கோளாறுகளை குறைய செய்கிறது.
பெண்களுக்கு ஏற்படும் ஒழுங்கற்ற மாத விலக்கு குறைப்பாட்டை நீக்க பேரீச்சம் பழம் மருந்தாக பயன்படுகிறது.
பேரீச்சம் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.
பேரீச்சம் பழம் எலும்புகளை பலப்படுத்தும்.
பேரீச்சம் பழம் இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.
பேரீச்சம் பழம் புண்களை ஆற செய்யும், மூட்டு வலியை குறையச் செய்யும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum