வசீகரிக்கும் வளையல்
Page 1 of 1
வசீகரிக்கும் வளையல்
வளையல்கள் இந்திய மரபு அணிகலன்கள் ஆகும். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்தியப் பெண்களுக்கு வளையல் அணியும் வழக்கம் இருந்தது. பல்வேறு அகழ்வாரய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. வளையலை ஆங்கிலத்தில் பேங்கின்ஸ் என்று அழைக்கிறார்கள்.
இந்த வார்த்தை பங்க்ரி (கண்ணாடி) என்ற இந்தி வார்த்தையில் இருந்து வந்துள்ளது தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகிய விலை மதிப்புள்ள உலோகங்களாலும், கண்ணாடி, மரம், இரும்பு, பிளாஸ்டிக் போன்ற விலை மதிப்பற்ற பொருட்களாலும் வளையல்கள் தயாரிக்கப்டுகின்றன. வெள்ளை நிற சங்க வளையல்களை மணமான வங்கப்பெண்கள் அணிவது மரபு.
அலுமினியம், பிளாட்டினம், கண்ணாடி, மரம் எனப் பல தரப்பட்ட பொருட்களால் வளையல்கள் உருவாக்கப்டுகின்றன. திருமணத்திலும் தொடர்ந்து முதலிரவு சடங்குகளிலும் மணப்பெண்கள் வளையல்கள் அணிந்து கொள்கிறார்கள். பச்சிளம் குழந்தை முதல் வயதான பெண்கள் வரை பல விதமான வளையல்களை விரும்பி அணிகின்றனர்.
கண்ணாடி வளையல்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் வளையல்களின் உபயோகம் அதிகரித்தாலும் திருமணம் விழாக்கள் போன்ற சடங்குகளில் கண்ணாடி வளையல்களே விரும்ப்படுகின்றன. கைவினைக் கலைஞர்களின் வேலைப்பாடுமிக்க வளையல்கள் தொடங்கி வைரம், ஜாதிக்கற்கள், நல்முத்து பதிக்கப்பட்ட வளையல்கள் வரை பல தர வடிவமைப்புகள் உண்டு.
தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த உலோகங்களால் ஆன வளையல்கள் கலகலவென்று ஒலிக்கும். செயற்கை வளையல் ஆபரணங்கள் வேறுவிதமான சத்தத்தை எழுப்பும். திடமான உருளை, பிளவுபட்ட சுருள் என்று இரண்டு வரை வளையல்கள் உண்டு. கண்ணாடி முதல் பச்சை பாசி மணி வரை, அரிய உலோகம் முதல் அரக்கு வரை வளையல்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களின் அடிப்படையில் வகைப்படுத்துவதும் உண்டு.
அரக்கு என்பது ஒரு வகை மண் ஆகும். இவை சூளைகளில் வளையல்களாக வார்க்கப்படுகின்றன. ரப்பர் வளையல்கள் புதிய வரவாகும். சீக்கிய ஆண்கள் தங்கள் மணிக்கட்டில் கடா அல்லது கரா என்ற பெயரில் ஒற்றை வளையல் அணிகின்றனர். சூடா என்பது பஞ்சாபி பெண்களால் திருமணத்தின் போது சிவப்பு, வெள்ளை நிறங்களில் அணியக்கூடியதாகும்.
உலகிலேயே மிகுந்த அளவில் வளையல் உற்பத்தியாகும் இடம் இந்தியாவில் உத்திரப்பிரதேசத்தில் உள்ள மொராதாபாத் எனும் நகரமாகும். தெற்காசிய அரேபிய தீபகற்பங்களில் கலாசாரப்படி குறிப்பிட்ட வளையல்கள் சில சடங்குகள், சம்பிரதாயங்களில் அணிந்து கொள்ளும் ஆபரணங்களாக திகழ்கின்றன.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வளையல் வண்ண வளையல்!!
» நெல் நெக்லஸ் விதை வளையல்!
» வசீகரிக்கும் கண்கள் வேண்டுமா?
» வளையல் மாலை போட்டால் கெட்டிமேளம் தான்
» கை வளையல் அணிய இதோ??
» நெல் நெக்லஸ் விதை வளையல்!
» வசீகரிக்கும் கண்கள் வேண்டுமா?
» வளையல் மாலை போட்டால் கெட்டிமேளம் தான்
» கை வளையல் அணிய இதோ??
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum