தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வெற்றிலை சாதம்

Go down

வெற்றிலை சாதம் Empty வெற்றிலை சாதம்

Post  ishwarya Fri Mar 15, 2013 12:31 pm

தேவையான பொருட்கள்...

தளிர் வெற்றிலை - 10
சாதம் - 1 கப்
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கடுகு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2

செய்முறை...

• வெங்காயம், பச்சை மிளகாய், வெற்றிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை,காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து பின் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

• அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

• வெங்காயம் சிறிது வதங்கியதும் வெற்றிலை, தேவையான அளவு உப்பு போட்டு 5 நிமிடம் வதக்கவும். வெற்றிலை நன்கு வதங்கியதும் சாதத்தை போட்டு கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

• சத்தான ஆரோக்கியமான வெற்றிலை சாதம் ரெடி. இந்த வெற்றிலை சாதத்தை குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum