தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குடமிளகாய் சட்னி

Go down

குடமிளகாய் சட்னி  Empty குடமிளகாய் சட்னி

Post  ishwarya Fri Mar 15, 2013 12:03 pm

தேவையானப்பொருட்கள்:

சிவப்பு குடமிளகாய் – 2
காய்ந்த மிளகாய் - 4
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
பூண்டுப்பற்கள் – 8
புளி – ஒரு நெல்லிக்காயளவு
நல்லெண்ணெய்- 1 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – 1 தேவைக்கேற்றவாறு

செய்முறை:

• குடமிளகாயை, விதை நீக்கி விட்டு நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

• ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதில் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்கும் வரை வறுக்கவும். பருப்பு சிவந்தவுடன் அதில் காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து சற்று வதக்கவும்.

* பின்னர் அதில் குடமிளகாய்த் துண்டுகளைச் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கவும். கடைசியாக புளியையும் சேர்த்து வதக்கி, இறக்கி ஆற விடவும்.
• பின்னர் அதில் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்தெடுத்து, கடுகு, கறிவேப்பிலைத் தாளித்துக் அதில் கொட்டவும்.

• சிவப்பு நிற குடமிளகாய் உபயோகித்தால் சட்னி நல்ல நிறமாக இருக்கும். பச்சை நிற மிளகாயிலும் செய்யலாம். சுவையில் மாற்றமிருக்காது. ஆனால் சட்னியின் நிறம் சற்று மங்கலாக இருக்கும்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum