குடமிளகாய் சட்னி
Page 1 of 1
குடமிளகாய் சட்னி
தேவையானப்பொருட்கள்:
சிவப்பு குடமிளகாய் – 2
காய்ந்த மிளகாய் - 4
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
பூண்டுப்பற்கள் – 8
புளி – ஒரு நெல்லிக்காயளவு
நல்லெண்ணெய்- 1 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – 1 தேவைக்கேற்றவாறு
செய்முறை:
• குடமிளகாயை, விதை நீக்கி விட்டு நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
• ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதில் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம்
பருப்பைப் போட்டு சிவக்கும் வரை வறுக்கவும். பருப்பு சிவந்தவுடன் அதில்
காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து சற்று வதக்கவும்.
* பின்னர் அதில் குடமிளகாய்த் துண்டுகளைச் சேர்த்து ஓரிரு நிமிடங்கள்
வதக்கவும். கடைசியாக புளியையும் சேர்த்து வதக்கி, இறக்கி ஆற விடவும்.
• பின்னர் அதில் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு சற்று கொரகொரப்பாக
அரைத்தெடுத்து, கடுகு, கறிவேப்பிலைத் தாளித்துக் அதில் கொட்டவும்.
• சிவப்பு நிற குடமிளகாய் உபயோகித்தால் சட்னி நல்ல நிறமாக இருக்கும். பச்சை
நிற மிளகாயிலும் செய்யலாம். சுவையில் மாற்றமிருக்காது. ஆனால் சட்னியின்
நிறம் சற்று மங்கலாக இருக்கும்

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum