அனுமன் ஜெயந்தி
Page 1 of 1
அனுமன் ஜெயந்தி
அனுமன் ஜெயந்தி
பஞ்சமுக ஆஞ்சநேயர்.......
ஹனுமன் முகம், நரசிம்ம முகம், கருடன் முகம், வராஹமுகம், ஹக்கிரீவர் முகம் என ஆஞ்சநேயர் ஐந்து முகவடிவில் ஒருங்கிணைந்து உள்ளார். கிழக்கு முகம் ஹனுமனாக சத்ருக்களை அழிக்க வந்த முகம் "பிரதிவாதி முகஸ்நம்பி'' என்ற சுலோக வரியினால் அனுமனை வேண்டினால் எதிரிகள் விலகுவர் என பொருள் தரும்.
தெற்கு முகம் நரசிம்ம முகம். இம்முக ரூப ஆஞ்சனேயர் பயத்தினால் உண்டாகும் பிரச்சனைகள், பில்லி சூன்யம் துஷ்ட தேவதைகளால் உண்டாகும் பரயந்த்ர, பரமந்த்ர தோஷங்களை போக்க அவதரித்த முகம். மேற்கு முகம் கருடன் முகத்தரிசனம் சரும நோய், விஷ நோய், ஊழ்வினை நோய்களை போக்கி அருள்தரும்.
வடக்கு முகம் வராஹமுகத் தரிசனம், தீராத கடன், பொருள் இழப்பு விஷ சுரம், மர்ம நோய்கள் முதலியனவற்றை அழித்து சாந்தியும், நிம்மதியும் தரவல்லது. பொருளாதார மேன்மை உண்டாகும். மேல் முகம் ஸ்ரீஹயக்கிரீவர் முகம்.
இம்முக ஆஞ்சநேயர் சகல கலைகளையும், சிறந்த ஞானத்தையும், சொல் வன்மையையும், சகல கலா வல்லவனாக தேர்ச்சியையும் தருபவர் சொல்லின் செல்வன் என சீதையால் போற்றப்பட்ட அனுமனை பஞ்சமுக ஆஞ்ச நேயராக வழிபாடு செய்யும் போது உங்களுக்கும் சொல் வன்மை, ஆரோக்யம், எதிரிகள் விலகல் என அனைத்தும் உண்டாகும். பஞ்சமுக ஆஞ்சநேயர் திருநள்ளார் நள தீர்த்தத்தில் இருந்து வரும் வழியில் அருள் தருகின்றார்.
வெற்றிலை மாலை.....
வெற்றிகளைத்தர ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவிக்கப்படுகிறது. வெற்றிலையில் பாக்கும் ஒரு பணமும் (1 ரூபாய்) வைத்து மடித்து மாலையாக கட்டி அனுவித்து வருவது வழக்கம். அதற்குப் பதில் வெற்றிலை பாக்கு தாம்பூலத்துடன் ஒரு பழமும், குங்குமம், மஞ்சளும் வைத்து சுமங்கலிப் பெண்களுக்கு கொடுப்பதும் மிக மிக சிறப்பானது. 108 எட்டுப் பேருக்கு தருவது நல்லது. கோயிலுக்கு வரும் பெண்களுக்கு தருவதன் மூலம் வெற்றி தொடரும்.
சிவனின் அம்சம்.....
மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என உள்ள பஞ்சபூத அம்சங்கள் ஒன்றுடன் ஒன்று ஒடுங்குவது, ஆனால் இவ்அனைத்தும் சிவனில் ஒடுங்குவதால் வாயு அம்சமான அனுமன் சிவனின் அம்சமாகவே அருள் தருகின்றார். அனுமன் என்றால் தாடை நீண்டவர் என பொருள்படும்.
ஒரு முறை சூரியனைப் பார்த்து விண்ணில் தெரியும் கனி என நினைத்து ஆகாயத்தில் சூரியனை பிடிக்க தாவிப் பறந்து செல்கிறார் வாயு புத்திரன். அப்பொழுது தேவலோகத்திற்குள் வரும் இவரை இந்திரன் இந்திராயுதத்தால் தடுக்கும் போது தாடையில் பட்டு தாடை நீண்டு விடுகிறது. எனவே அன்று முதல் ஹனுமன் என்றழைக்கப்பட்டார். எனவே அனுமனின் தாடை நீண்டு இருக்கும்.
வழிபாட்டு முறை......
ஆஞ்சனேயருக்கு பழவர்க்கங்கள் மிகவும் பிரீத்தி என்பதால் வீட்டில் ஆஞ்ச நேயர் படம் வைத்து நான்கு புறத்திலும் பந்தல் போல் செய்து, பந்தலில் பூச்சரம் ஒரு வரிசையும், பழச்சரம் ஒரு வரிசையுமாக கட்டி பழப்பந்தல், பூப்பந்தல் அலங்கரிக்க வேண்டும்.
வடை, வெண்ணெய் வைத்து நெய் தீபம் ஏற்றி ராமாயணத்தின் சுந்தரகாண்டம், ஆஞ்சநேய தண்டகம், ஸ்ரீஅனுமத்துதி (சாம்பவான் புகழ்தல்) ஸ்ரீஆஞ்சநேயர் திருப்பதிகம், மாருதி கவசம், ஸ்ரீஆஞ்சநேயர் ஸ்தோத்திரம், ஆஞ்சநேயர் போற்றி வழிபாடு, ஆஞ்சநேயர் சத நாமா வழி, ஆஞ்ச நேயர் சகஸ்ர நாமா வழி போன்றவற்றை வீட்டில் படித்து பூஜை செய்து அருகில் உள்ளவர்களுக்கு பிரசாதமாக தந்து மகிழலாம்.
இத்தனை வகையும் தெரியாதே என யோசிக்க வேண்டாம், ராமா, ராமா எனும் ராம நாமம் ஜெபித்தாலே ஆஞ்சநேயர் அருகில் வந்து அருள் தருவார். உங்கள் குழந்தைகளுக்கு ஆஞ்சநேயரின் பராக்கிரமங்களை இன்று சொல்லி வையுங்கள் பயமின்றி படிப்பார்கள்.
பலன்கள்......
கவலைகள் நீங்கும், திருமணத் தடை அகலும், நாகதோஷம், பில்லி, சூனியம் விலகும்,கடன் அகலும், வறுமை நீங்கும், பயம் அடியோடு ஓடும், தொழில் மேன்மை உண்டாகும். குழந்தைகள் இரவில் பயத்தினால் அலறுவது அகலும், புத்திர பாக்யம் கிட்டும், பிறந்த நாளில் மகிழ்ச்சியாக இருப்பவரிடம் வேண்டுவது எல்லாம் கிடைத்து உன்னத நிலை அடைவீர்கள்.
வெளித் தொடர்புகள், நட்பின் மேன்மை உண் டாகும். வேண்டுவன அனைத்தும் பெற்று வெற்றியாளராக உலாவருவீர்கள். எனவே வாருங்கள் ஆஞ்சநேயரை தரிசித்து வருவோம் என்கிறார் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையைச் சேர்ந்த விஜய்சுவாமிஜி.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» அனுமன் ஜெயந்தி
» அனுமன் ஜெயந்திஅனுமன் ஜெயந்தி
» அனுமன் ஜெயந்தி வழிபாடு பலன்கள்
» அனுமன் பாமாலை
» அனுமன் பாமாலை
» அனுமன் ஜெயந்திஅனுமன் ஜெயந்தி
» அனுமன் ஜெயந்தி வழிபாடு பலன்கள்
» அனுமன் பாமாலை
» அனுமன் பாமாலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum