மஞ்சளில் வாசம் செய்யும் லட்சுமி
Page 1 of 1
மஞ்சளில் வாசம் செய்யும் லட்சுமி
மஞ்சளிலும் ஸ்ரீ லட்சுமி வாசம் செய்கிறாள். மஞ்சள் செடியை வளர்ப்பது விசேஷம். மங்களகரமான பொருள் மஞ்சள் என்பதால், எல்லாவிதமான சுபமுகூர்த்தங்களுக்கும் மஞ்சள் உபயோகப்படுகிறது. மஞ்சள் கலந்த மந்திராசத்தை - மங்களார்த்தி என்று கூறப்படும் மஞ்சள் நீர், மஞ்சள் பூசிய மாங்கலய சரடு என்று பல மங்களகரமான பொருட்களோடு, மஞ்சள் கலந்து சர்வ மங்களமாகிறது.
பெண்களின் நெற்றியிலும், வகிடிலும் இட்டுக் கொள்ளும் மஞ்சள் குங்குமம் பெண்களின் சவுபாக்கிய சின்னமாக விளங்குகிறது. குங்குமத்துடன் விளங்கும் பெண்களை மகாலட்சுமி மாதிரி இருக்கிறாள் என்று கூறுவது நமது மரபு. ஸ்ரீ வைஷ்ணவர்கள் அணிந்து கொள்ளும் திருமண், ஸ்ரீ சூர்ணம் அவற்றிலும் திருமாலும், ஸ்ரீமகளும் வாசம் செய்கின்றனர்.
ஸ்ரீ சூர்ணத்தை ஹரித்ராசூர்ணம் என்று கூறுவர். மஞ்சளினால் செய்யப்பட்டது தான் ஸ்ரீ சூர்ணம். அதுவே ஸ்ரீ லட்சுமி. அதேபோல் திருமண் என்றால் திவ்யமான மண் என்று பொருள். திருமண் திருமாலின் அம்சமாகக் கருதப்படுகிறது. திருமண்ணையும் ஸ்ரீ சூர்ணத்தையும் சேர்த்து நெற்றியில் இட்டுக் கொள்வது தான் சிலாக்கியம்.
ஒன்றை விட்டு ஒன்றை மட்டும் இட்டுக் கொள்ளுதல் கூடாது. ஸ்ரீ ராமச்சந்திர பிரபுவையும், சீதா பிராட்டியாரையும் சேர்த்துப் போற்றிப் பணிந்த ஆஞ்சநேய மகாப் பிரபுவும், அவரது திருவடியைச் சிந்தனையிலே கொண்ட பக்தர்களும் சகல சவுபாக்கியங்களுடனும் வாழ்கின்றனர். இல்லங்களை ஸ்ரீ லட்சுமி கடாட்சத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும்.
அப்போது தான் அவள் நம்முடன் வாசம் செய்வாள். வைகறைக் துயில் எழுந்து, நீராடி, சூரியன் உதயமாவதற்கு முன்னால் வீட்டு வாயிலை பசு சாணத்தால் மெழுகி, கோலமிட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.
கோலம் போடும் பழக்கம் என்பது பண்டுதொட்டு நமது பாரத நாட்டில் இருந்து வருவதால் தான் மாக்கோலம், இழை கோலம், புள்ளிக்கோலம், வர்ணப் பொடிகளைத் தூவி போடும் ரங்கோலி போன்ற கோலங்கள் மிகவும் பிரபலமாக உள்ளன.
மாக்கோலத்தை சுற்றி காவி பூசுவதும் பழக்கத்தில் உள்ளது. புராண காலத்தில் யாக சாலைகளில் விதவிதமான வண்ணக் கோலங்களை போட்டு, அக்கோலங்களின் மீது ஹோம குண்டங்களை அமைப்பதை பழக்கமாக கொண்டிருந்தனர். ஸ்ரீ லட்சுமி தேவி தீபமங்கள ஜோதியாக விளங்குகிறாள். இல்லத்திலே விளக்கு எரிவதால் லட்சுமி நிரந்தரமாக வாசம் புரிவாள்.''
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» மஞ்சளில் வாசம் செய்யும் லட்சுமி
» லட்சுமி குபேரன் வாசம் செய்ய வாஸ்து ரகசியம்
» மஞ்சளில் நோய் மேலாண்மை
» மஞ்சளில் நோய் மேலாண்மை
» லட்சுமி கணபதி மந்திரம் ஓம் ஸ்ரீம்கம் சௌம்யாய லட்சுமி கணபதயே வரவரத சர்வதனம்மே வசமானய ஸ்வாஹா
» லட்சுமி குபேரன் வாசம் செய்ய வாஸ்து ரகசியம்
» மஞ்சளில் நோய் மேலாண்மை
» மஞ்சளில் நோய் மேலாண்மை
» லட்சுமி கணபதி மந்திரம் ஓம் ஸ்ரீம்கம் சௌம்யாய லட்சுமி கணபதயே வரவரத சர்வதனம்மே வசமானய ஸ்வாஹா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum