தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காளான் ஆம்லெட்

Go down

காளான் ஆம்லெட்                              Empty காளான் ஆம்லெட்

Post  ishwarya Thu Mar 14, 2013 4:55 pm

தேவையான பொருட்கள்:

முட்டை - 3
பட்டன் காளான் - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
சாட் மசாலா - 1 சிட்டிகை
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

* அதே சமயம் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயை போட்டு உருகியதும், காளான் மற்றும் வெங்காயத்தை போட்டு, 2 நிமிடம் வதக்கி, உப்பு சிறிது தூவி, மறுபடியும் நன்கு கிளறி விட வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் முட்டை கலவையை தோசைப் போல் ஊற்றி, இருபுறமும் வேக வைத்து, பிறகு அதனை ஒரு தட்டில் வைத்து, அதன் மேல் அந்த காளானை பரப்பி, சாட் மசாலாவை தூவி, மடக்க வேண்டும்.

* இப்போது சூப்பரான காளான் ஆம்லெட் ரெடி!!!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum