தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சின்ன படம், பெரிய படம் வித்தியாசம் பார்க்கக்கூடாது: தேவா

Go down

சின்ன படம், பெரிய படம் வித்தியாசம் பார்க்கக்கூடாது: தேவா Empty சின்ன படம், பெரிய படம் வித்தியாசம் பார்க்கக்கூடாது: தேவா

Post  ishwarya Thu Mar 14, 2013 2:47 pm

சென்னை : மருதமலை பிலிம்ஸ் சார்பில், ரேஸ்கோர்ஸ் ரகுநாத் தயாரித்து, இயக்கும் படம் ‘சிறுவாணி’. சஞ்சய், ஐஸ்வர்யா நடிக்கிறார்கள். இதன் பாடல்களை வெளியிட்டு இசை அமைப்பாளர் தேவா பேசியதாவது: இந்த சிறு படத்துக்கு நன்றாக இசை அமைத்திருப்பதாக பலர் குறிப்பிட்டார்கள். அப்போதும் சரி, இப்போதும் சரி, பெரிய படம், சிறிய படம் என்று எப்போதும் பிரித்துப் பார்ப்பதில்லை. நான் மட்டும் இல்லை, எந்த இசை அமைப்பாளரும் பார்க்க மாட்டார்கள்.

பார்க்கவும் கூடாது. படங்களின் பட்ஜெட்டை வைத்து எனக்கு வித்தியாசம் தெரிந்தாலும் என் ஆர்மோனியப் பெட்டிக்குத் தெரியாது. எல்லா படத்துக்கும் மனசும், ஆர்மோனியப் பெட்டியும் ஒரே மாதிரிதான் வேலை செய்யும். நல்ல கதை, நல்ல நடிப்பு, நல்ல உழைப்பு, நல்ல இசை சேர்ந்தால் பெரிய படம். அது மக்களுக்கு பிடித்து விட்டால் மிகப் பெரிய படம். இவ்வாறு தேவா பேசினார். விழாவில், பாடலாசிரியர் அண்ணாமலை, ரவிசங்கர், ஒளிப்பதிவாளர் வி.ஏ.ராமலிங்கம், யு.கே.செந்தில்குமார், பாபிலோனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum