85 ரூபாய்க்கு வாங்கிய ஆர்மோனியத்தையே இன்றும் வாசிக்கிறேன்
Page 1 of 1
85 ரூபாய்க்கு வாங்கிய ஆர்மோனியத்தையே இன்றும் வாசிக்கிறேன்
கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடந்த ‘இசை மாலை இளையராஜா‘ நிகழ்ச்சியில் இளையராஜா பேசியதாவது: அலைந்து திரிந்து 30 ஆண்டுகளுக்கு முன் கோவை ஆர்.எஸ்.புரத்தில் 85 ரூபாய்க்கு வாங்கிய ஆர்மோனிய பெட்டியை வைத்துதான், அண்ணன்கள் பாவலர் வரதராஜன், பாஸ்கர் மற்றும் நான், கச்சேரி நடத்தியிருக்கிறோம். இப்போதும் இதை வைத்துதான் இசை நிகழ்ச்சி நடத்துகிறேன். கச்சேரி நடத்துவதும், சினிமாவுக்கு இசை அமைப்பதும் ஒன்று தான். என் வாழ்வில் எல்லாம் இசையாகவே இருக்கிறது. சுப்பையா நாயுடு குழுவில் எம்.எஸ்.விஸ்வநாதன் இருந்தார். ஒருநாள் யாருக்கும் தெரியாமல் பாடலுக்கு எம்.எஸ்.வி. போட்ட டியூனை சுப்பையா நாயுடு பார்த்து, அதையே பாடலுக்கு பதிவு செய்தார். அந்த பாடலுக்காக அந்த சினிமா 100 நாள் ஓடியது. ஒருநாள் ரெகார்டிங் ஸ்டுடியோ மூடும் நிலை ஏற்பட்ட போது, எம்.எஸ்.வியின் திறமை குறித்தும், அவர் டியூன் போட்ட பாடல் குறித்தும் சுப்பையா நாயுடு தெரிவித்தார். ‘ஸ்டுடியோவில் இருந்து யாரை வேண்டுமானாலும் வெளியேற்றுங்கள்; இவ்வளவு நாள் ஸ்டுடியோ இயங்க காரணமாக இருந்த எம்.எஸ்.வியை வெளியேற்ற கூடாது’ என கூறினார். இசையமைப்பாளர்கள் குறிப்பு எடுத்த பின்னரே இசையமைப்பார்கள். ஆனால் எம்.எஸ்.வி. ரெகார்டிங் அரங்கில் இசைக்க வைத்து குறிப்பு தருவார். இதனால்தான் இவர் ரசிகர்களால் மறக்க முடியாதவராக இருக்கிறார். சி.ஆர்.சுப்புராமன் என்பவரே எனது மானசீக குரு. 7 வயதில் இருந்தே இவரது பாடல்கள் என்னை கவர்ந்தன. இவ்வாறு இளையராஜா பேசினார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» 5000 ரூபாய்க்கு குழந்தையை விற்ற திருமணமாகாத தாய்!
» 1 கோடிக்கு ரூபாய்க்கு ஏலம் போனது மைக்கேல் ஜாக்சனின் கையுறை.
» அன்றும் இன்றும்
» இன்றும் நமதே
» இன்றும் நமதே
» 1 கோடிக்கு ரூபாய்க்கு ஏலம் போனது மைக்கேல் ஜாக்சனின் கையுறை.
» அன்றும் இன்றும்
» இன்றும் நமதே
» இன்றும் நமதே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum