தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

த்ரிஷாவுடன் நடிக்கிறார் பூர்ணா

Go down

    த்ரிஷாவுடன் நடிக்கிறார் பூர்ணா   Empty த்ரிஷாவுடன் நடிக்கிறார் பூர்ணா

Post  ishwarya Wed Mar 13, 2013 6:02 pm

சென்னை : த்ரிஷாவுடன் நடிக்க இருப்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று பூர்ணா கூறினார். அவர் மேலும் கூறியதாவது: ‘படம் பேசும்’ படத்துக்கான கிளைமாக்ஸ் காட்சி சாலக்குடியில் நடந்தது. இங்குள்ள அதிரபள்ளி நீர்வீழ்ச்சியை பாடல் காட்சிக்குத்தான் பயன்படுத்துவார்கள். ஆனால், இதில் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாகிறது. மிகவும் ரிஸ்கான பல காட்சிகள் இங்கு எடுக்கப்பட்டது. மொத்த படக்குழுவும் பயந்துகொண்டே இருந்தது.

ஆனால், எந்த பிரச்னையும் இன்றி காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டன. மலையாளத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள ‘ஆறு சுந்தரிகளுடெ கதா’ படத்தில் நடிக்கிறேன். இதில் சில முன்னாள் ஹீரோயின்களும் நடிக்கிறார்கள். அவர்களுடன் நடிக்கும்போது சில அனுபவங்கள் கிடைக்கும். அதற்காகவே அதில் நடிக்க சம்மதித்தேன். அடுத்து தெலுங்கில் ‘ரம்பா ஊர்வசி மேனகா’ என்ற படத்தில் நடிக்கிறேன். இதில் த்ரிஷாவும் நடிக்கிறார். அவருடன் நடிப்பதை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷாவுடன் நடிப்பதில் எனக்கு பெருமைதான்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum