மீனவ மக்களின் 4 நாள் வழிபாடு
Page 1 of 1
மீனவ மக்களின் 4 நாள் வழிபாடு
வட தமிழ் நாட்டின் கடலோரத்தில் வாழும். மீனவ சமுதாய மக்கள் ஆண்டுக்கு ஒரு தடவை ஆடி மாத விழாவின் போது பெரிய பாளையம் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்துவதை வழக்கத்தில் வைத்துள்ளனர். ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்லும் போது எந்தவித ஆபத்தும் ஏற்பட கூடாது என்பதற்காகவும், நிறைய மீன் கிடைக்க வேண்டும்
என்பதற்காகவும் இந்த சிறப்பு வழிபாட்டை மீனவர்கள் நடத்துகிறார்கள்.
இந்த வழிபாட்டுக்கு காசிமேடு உள்பட கடலோரப் பகுதி மீனவர்கள் குடும்பம், குடும்பமாக பெரியபாளையம் தலத்துக்கு செல்வார்கள் மற்ற பக்தர்கள் போல அவர்கள் ஒரு நேரம் மட்டும் தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்து விட மாட்டார்கள். 4 நாட்கள் பெரியபாளையத்தில் தங்கிருந்து,பவானி அம்மனின் அருள் பார்வை தங்கள் மீதுபடும் வகையில் வழிபாடுகளை செய்த பிறகே வீடு திரும்பி வருவார்கள்.
வீட்டில் இருந்து வியாழக்கிழமை புறப்பட்டு செல்லும் மீனவர்கள் வெள்ளி, சனி,ஞாயிறு, திங்கள் ஆகிய 4 நாட்கள் பெரியபாளையம் ஆரணி ஆற்றில் குடில்கள் அமைத்து தங்குவார்கள். அங்கிருந்த படி பொங்கல் வைத்து சாப்பிட்டப்பட்டி அடிக்கடி பவானியம்மனை வணங்கி செல்வார்கள்.
மீனவ குடும்பத்து பெண்கள் தங்கள் தாலி சரடை கழற்றி உண்டியலில் போட்டு பிரார்த்தனைகளை நிறைவேற்றுவார்கள். 4 நாள் மனம் குளிர வழிபட்ட பிறகு செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் பவானி அம்மனை வணங்கி விடைபெற்று செல்வார்கள்.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» பைரவரை வழிபாடு செய்ய சிறந்த நாள்
» பைரவரை வழிபாடு செய்ய சிறந்த நாள்
» 10 நாள் வழிபாடு
» 48 நாள் அய்யப்ப விரதம்- வழிபாடு பலன்கள்
» பைரவரை வழிபாடு செய்ய சிறந்த நாள்
» பைரவரை வழிபாடு செய்ய சிறந்த நாள்
» 10 நாள் வழிபாடு
» 48 நாள் அய்யப்ப விரதம்- வழிபாடு பலன்கள்
» பைரவரை வழிபாடு செய்ய சிறந்த நாள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum