பைரவரை வழிபாடு செய்ய சிறந்த நாள்
Page 1 of 1
பைரவரை வழிபாடு செய்ய சிறந்த நாள்
பொங்கல் திருநாள், மகர சங்கராந்தி, ரதசப்தமி, உத்தராயன புண்ணியகாலத் துவக்கம் என எண்ணற்ற வைபவங்களுடன் திகழும் தை மாதத்துக்கு இன்னொரு விசேஷமும் உண்டு. ஆமாம் காவல் தெய்வம் பைரவர் வழிபாட்டுக்கும் உகந்த மாதம். தை மாதம் முதல் செவ்வாயில் துவங்கி, அனைத்து செவ்வாய்க் கிழமைகளிலும் பைரவரை வழிபடுவது சிறப்பு.
அதிலும் பைரவரின் மகாத்மியத்தை அறிந்து வழிபடுவதால், பலன்கள் பன்மடங்கு அதிகம் கிடைக்கும். சிவாலயங்களில், விநாயகர் தரிசனத்துடன் ஆரம்பிக்கும் வழிபாடு, பைரவ தரிசனத்துடன் நிறைவடையும். பைரவருக்கு மிகவும் உகந்த நாள் அஷ்டமி என கருதப்படுகிறது. பொதுவாக, மக்கள் அஷ்டமி அன்று எந்த நல்ல காரியமும் செய்ய மாட்டார்கள். அதன் உண்மைக்காரணம் வேறு.
இறையாணைப்படி, அனைத்து ஜீவராசிகளுக்கும் எல்லா ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் பணியினை நிறைவேற்றுபவர்கள் அஷ்ட லட்சுமிகள். சொர்ண பைரவரிடம், சக்திகளைப் பெற்று தாங்கள் பெற்ற அதனை பக்தர்களுக்கு விநியோகம் செய்துவருகின்றனர்.தாங்கள் பெற்ற சக்தி குறைய குறைய, ஒவ்வொரு அஷ்டமியிலும் பைரவரை வழிபாடு செய்து தங்கள் சக்தியை பெருக்கிக் கொள்ளுகின்றார்கள்.
அஷ்டமிஅன்று, அஷ்ட லட்சுமிகளே பைரவ வழிபாட்டில் ஈடுபடுவதால்,அவர்களால் அன்று நடைபெறும் நற்காரியங்களில் ஈடுபட முடியாது. ஆகவே, அஷ்ட லட்சுமிகளே வழிபடும் அந்த அஷ்டமி நன்னாளில், நாம் நேரடியாக ஸ்ரீபைரவரை வணங்கிவந்தால், அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
தேய்பிறை அஷ்டமி,குறிப்பாக கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி பைரவ வணக்கத்திற்கு மிகவும் சிறந்தது. சாதாரணமாக, நாய் வாகனம் பைரவரின் பின்புறம் வலப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும். சில இடங்களில் இடப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும். மிக அரிதாக, சில இடங்களில் மட்டுமே இருபக்கமும் நாய்வாகனங்களுடன் பைரவர் காட்சி தருகிறார்.
இவ்வாறு, இடப்பக்கம் மற்றும் இரு வாகனங்களுடன் உள்ள பைரவ பெருமான், மிகுந்த சக்தியுடன் விளங்குவதாக ஐதீகம்.ஏவல், பில்லி சூனியம், பேய் பிசாசு முதலியவற்றின் தொல்லை களிலிருந்து பூரண விடுதலை அடைய, வாழ்வில் வளம் பெற, திருமணத்தடைகள் நீங்கிட, பிதுர்தோஷம், சனி தோஷம், நீங்க பைரவர் வழிபாடு மிகவும் உதவும்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» பைரவரை வழிபாடு செய்ய சிறந்த நாள்
» பைரவரை வழிபாடு செய்ய சிறந்த நாள்
» நாகதோஷம் விலக சிறந்த வழிபாடு….
» சிரார்த்தம் செய்ய மிகச் சிறந்த காலங்கள்
» மீனவ மக்களின் 4 நாள் வழிபாடு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum