விரியும் பேரரசு
Page 1 of 1
விரியும் பேரரசு
என்னத்தை சொல்ல?
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குறைந்தது ஒரு படமாவது வெளியாவதாக வைத்துக் கொள்வோம். அப்படி ரிலீசாகும் படமும் சூப்பர் டூப்பர் ஹிட். ஆனால், என்னத்துக்கு ஆகும்?
அதுதான் சென்ற ஆண்டு தெலுங்கு சினிமாவில் நிகழ்ந்தது. எந்தப் பந்தையும் வீணாக்காமல் சிக்ஸராக அடித்துத் தள்ளினார்கள். எகிறிய ஸ்கோர் போர்டில் தெறித்து விழுந்த எண்களின் எண்ணிக்கை பல நூறு கோடிகள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த வெற்றிப் போதையுடன்தான் இந்த ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்கள். எனில், அதே களிப்பு இந்தாண்டும் தொடருமா? ரும். வெளிவர இருக்கும் படங்களின் பட்டியலை பார்க்கும்போது அப்படித்தான் தெரிகிறது.
‘சீதம்மா வாகிட்லோ சிரிமலே செட்டு’ தெலுங்கு சினிமாவின் காலரை உயர்த்த வந்திருக்கும் படம். மகேஷ்பாபு, வெங்கடேஷ் என இரு முன்னணி நடிகர்கள் எந்தவித ஈகோவும் இன்றி, அதுவும் பாதி சம்பளத்தில், இப்படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பிறகு ஆந்திராவில் தயாராகும் மல்டி ஸ்டார் படம் என்பதால் ஒட்டு மொத்த மாநிலமும் இப்படத்தின் வருகைக்காக காத்திருக்கிறது.
இது தவிர, ‘ஆர்யா’ சுகுமார் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத சைக்கோ திரில்லரிலும் மகேஷ்பாபு நடிக்கிறார். அதே போல் மெஹர் ரமேஷ் டைரக்ஷனில் தனி ஹீரோவாக ‘ஷேடோ’ படத்தில் வெங்கடேஷ் பட்டையை கிளப்புகிறார். ஸோ, இந்த ஆண்டு இவர்கள் இருவரது நடிப்பிலும் இரு படங்கள் வெளியாகின்றன.இதை சமன் செய்யும் முயற்சியில் ராம்சரணும் இறங்கியிருக்கிறார். ‘நாயக்’, ‘எவடு’ என இரு படங்களை தன் பங்குக்கு 2013ல் இறக்குகிறார்.
தொடர் வெற்றிகளை கொடுத்து வரும் பவன் கல்யாண், தன் ஸ்வீட் நண்பரான திரி விக்ரம் டைரக்ஷனில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறார். இந்த மாதம்தான் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.
ஜூனியர் என்டிஆர் நடிக்க, சீனு வைட்யாலா இயக்கும் ‘பாட்ஷா’ படத்துக்கான வெற்றி விழாவை இப்பொழுதே கொண்டாடி விட்டார்கள்! பம்பர் ஹிட் காம்பினேஷன் என்பதால்தான் இந்த ஆரூடம்.
அதிகபட்சம் நூறு நாட்களுக்குள் முழு படத்தையும் முடித்துவிடும் வல்லமை படைத்த பூரி ஜெகன்நாத் டைரக்ஷனில் ‘இதரம்மாயிலுதோ’ படத்தில் அல்லு அர்ஜுன் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தனது ஏரியாவான ரொமான்சில் கலக்க நாகார்ஜுனா முடிவு செய்துவிட்டார் போலும். ‘லவ் ஸ்டோரி’, ‘பாய்’ என இரு படங்களிலும் காதல் ரசம் சொட்டச் சொட்ட அவர் நடித்து வருவதைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது.
‘மிர்ச்சி’ படத்தை முடித்த கையோடு இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் இயக்கத்தில் உருவாகும் சரித்திரப் படத்தில் நடிக்கிறார் பிரபாஸ். இந்தப் படத்தில் இவருக்கு வில்லனாக நடிக்கப் போகிறவர், ‘திரிஷா புகழ்’ ராணா என்று கசியும் தகவல் படம் குறித்த எதிர்பார்ப்பை பலமடங்கு அதிகரித்திருக்கிறது.
மாஸ் மகாராஜாவான ரவிதேஜாதான் பாவம் அதள பாதாளத்தில் விழுந்துக் கிடக்கிறார். ஏழரை சனி சென்ற ஆண்டு அவரை நார் நாராக கிழித்துவிட்டது. அதிலிருந்து தப்பிக்க ‘பலுபு’, ‘ஜிந்தாதா ஜிந்தா ஜிந்தா’ ஆகிய இரண்டு படங்களையும் மலை போல் நம்பியிருக்கிறார்.
கிட்டத்தட்ட இதே நிலையில் இருக்கும் பாலகிருஷ்ணா, எந்த முயற்சியிலும் இறங்காமல் மவுனமாக இருப்பது அவரது ரசிகர்களை சோர்வடையச் செய்திருக்கிறது. ஆந்திர சட்டசபை தேர்தல் வேறு கண்ணுக்கு எட்டிய தொலைவில் இருக்கிறது. அதற்குள் தனது 99 மற்றும் 100வது படத்தை அவர் முடித்தாக வேண்டும். ஆனால், யார் டைரக்ஷனில் நடிக்கப் போகிறார் என்பதை இன்னமும் முடிவு செய்யாமல் இருக்கிறார்.
ஆனால், சித்தார்த், அல்லரி நரேஷ், விஷ்ணு மஞ்சு, சுனில் ஆகியோர் தங்கள் நிலையை உணர்ந்து அதற்கேற்பவே நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதுபோக புகழ் பெற்ற இயக்குநரான சேகர் கமுலா, ‘கஹானி’ இந்திப் படத்தை ரீமேக் செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார். போலவே தனது கனவுப் படமான ‘ருத்ரம்மா தேவி’யை குணசேகர் இயக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.கூட்டி கழித்துப் பார்க்கும்போது பெரியவர்களும், சின்னவர்களுமாக சென்ற ஆண்டு போலவே இந்த ஆண்டும் சடுகுடு விளையாட தயாராகி விட்டார்கள் என்றே தெரிகிறது. நடத்துங்க.....

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கனவுகள் விரியும்
» மம்முட்டியை இயக்கும் பேரரசு
» ரஜினிக்கு கதை ரெடி -இயக்குனர் பேரரசு
» ரஜினிக்கு கதை ரெடி பண்ணிட்டேன்: பேரரசு
» விஜய் தந்தது வாய்ப்பல்ல, வாழ்க்கை – பேரரசு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum