தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கணவன் கண்முன்னே பாலியல் ரீதியாக மனைவி சிதைக்கப்பட்ட பயங்கரம்!

Go down

கணவன் கண்முன்னே பாலியல் ரீதியாக மனைவி சிதைக்கப்பட்ட பயங்கரம்! Empty கணவன் கண்முன்னே பாலியல் ரீதியாக மனைவி சிதைக்கப்பட்ட பயங்கரம்!

Post  meenu Wed Mar 13, 2013 5:03 pm

ஒடிஷா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிபட்டிருந்த சகோதரரை நலம் விசாரிக்க கணவனுடன் சென்ற 25 வயது பழங்குடியின பெண்ணை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளது.

சகோதரரை பார்த்துவிட்டு வீடு திரும்புகையில் மருத்துவமனையில் இருந்த சிலர் இளம்பெண்ணை தகாத வகையில் கேலி செய்தனர். இதனை தட்டிகேட்ட பெண்ணின் கணவரை தாக்கி, மரத்தில் கட்டிய கும்பல், கணவரின் கண்ணெதிரேயே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது.

இது தொடர்பாக பெண்ணின் கணவன் அளித்த புகாரின் பேரில், போலீசார், குந்தன் முகி (33), ரகு பிஸ்வால் (19), கோபி முகி (19), பலராம் முகி (27), சிபரம் காடேய் (20), சந்தன் முகி (20) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்திய ஜர்கந்து முகத்தி மோர்ச்சா குழுவினர், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 50 லட்சம் ருபாய் இழப்பீடாக வழங்கவேண்டுமென்றும், இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் தினசரி அடிப்படையில் விசாரித்து குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum