டி.டி.எச். சேனல்களிலும் தியேட்டரிலும் ஒரே நாளில் வெளியிடுவேன்
Page 1 of 1

சென்னை : ‘விஸ்வரூபம்’ படம் தியேட்டரிலும் டி.டி.எச்.சிலும் ஒரே நாளில் வெளியிடப்படும் என்று கமல்ஹாசன் தெரிவித்தார். கமல், இயக்கி நடித்துள்ள படம், ‘விஸ்வரூபம்’. இந்தப் படத்தை இன்று இரவு டி.டி.எச்.சிலும், நாளை தியேட்டரிலும் வெளியிட கமல் திட்டமிட்டிருந்தார். இதற்கு தியேட்டர் அதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் நடந்த பேச்சுவார்த்தையில், தியேட்டரில் ரிலீஸ் செய்துவிட்டு டி.டி.எச்.சில் படத்தை வெளியிட கமல் சம்மதித்ததாகக் கூறப்பட்டது. படம் 25&ம் தேதி ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் நேற்று நிருபர்களைச் சந்தித்த கமல்ஹாசன் கூறியதாவது: நான் என் வியாபாரத்தை சட்டப்படி செய்கிறேன். என் வழி, தனி வழி அல்ல, புது வழி. நாளை அது பொது வழியாகும். எனது வியாபாரத்தில் சிலர் தேவையில்லாமல் குழப்பம் விளைவிக்கிறார்கள், தடுக்க நினைக்கிறார்கள். இது சட்டவிரோதம். என் படத்தை தடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. நேர்மையாகத் தொழில் செய்ய விடாமல் மிரட்டுகிறார்கள். என் படத்தின் ரிலீஸ் தேதியை அவர்களே அறிவிக்கிறார்கள். அறிக்கை விடுகிறார்கள். என் தொழிலை தடுத்தவர்கள், மிரட்டியவர்கள் 13 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன்.
தேவைப்பட்டால் வழக்கும் தொடருவேன். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களது 3 வருட வியாபாரத் தொகையின் 10 சதவிகிதத்தை எனக்கு வாங்கித் தர சட்டத்தில் இடமிருக்கிறது. அவர்கள் என் நண்பர்கள் என்பதால் பெயரை வெளியிட விரும்பவில்லை. சில நண்பர்கள் என்னிடம் சில கோரிக்கை வைத்தார்கள். அதை கேட்டிருக்கிறேன். எனது சவுகரியத்துக்காக படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்திருக்கிறேன். பின்னொரு தேதியில் டி.டி.எச், தியேட்டர்கள் இரண்டிலும் ஒரே நாளில் வெளியிடுவேன். அது பற்றி யோசித்து வருகிறேன். யாருடைய வற்புறுத்தலுக்காகவும், மிரட்டலுக்கும் பணிந்து இதைச் செய்யவில்லை. விஸ்வரூபம் என் சொத்து, அதன் மீது முடிவெடுக்க எனக்கு மட்டுமே உரிமை இருக்கிறது.
எனது டி.டி.எச் பார்ட்னர்கள், படத்தை திரையிட முன்வந்துள்ள தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்களை கலந்து ஆலோசித்து இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் திரையிட ஏற்பாடு செய்து வருகிறேன். எந்த காரணத்தைக் கொண்டும் டி.டி.எச்.சில் வெளியிடும் முடிவை கைவிட மாட்டேன். டி.டி.எச் நிறுவனங்களும் இதை வீட்டு இணைப்புகளுக்கு மட்டுமே தரும். ஓட்டல்கள், கிளப்புகள், மண்டபங்களுக்கு தராது.
அப்படித்தான் உறுதி அளித்திருக்கிறார்கள். அதை மீறி செய்தால் அது சட்டவிரோதம். இந்த விஷயத்தில் அரசு எனக்கு உதவி செய்யும் என்று நம்புகிறேன். சட்டம் தன் கடமையை செய்யும் என்று நம்புகிறேன். தவறான வழியில் படத்தை திரையிட்டால் எனது ரசிகர்கள் எனது பாதுகாப்பு படைபோல நின்று பாதுகாப்பார்கள். நடைபெற்றுக் கொண்டிருக்கும் விஷயங்களில் உணர்ச்சி வசப்படாமல் தடுத்து அவர்களை என் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறேன்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சி.டி., ஆதாரத்தை வெளியிடுவேன்: மிரட்டும் நடிகை சோனா
» விஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக வெளியிடுவேன்: வனிதா பேட்டி
» புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கிய 11 நாடுகளின் விபரங்களை வெளியிடுவேன். மிரட்டுகின்றார் கேபி.
» ஒரு மழை நாளில்
» 5 நாளில் எல்லாம் முடிஞ்சிடும்! – த்ரிஷா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum