தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

2 இயக்குனர்கள் அறிமுகம்

Go down

2 இயக்குனர்கள் அறிமுகம்  Empty 2 இயக்குனர்கள் அறிமுகம்

Post  ishwarya Wed Mar 13, 2013 4:21 pm

சென்னை: தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனமான ஜே.வி.மீடியா ட்ரீம்ஸ் இந்த ஆண்டு சினிமா படங்கள் தயாரிக்க இருக்கிறது. இதற்கான துவக்க விழா, ஏவிஎம் ஸ்டூடியோவில் நடந்தது. இயக்குனர் கே.பாலசந்தர் துவக்கி வைத்தார். விழாவில் இயக்குனர்கள் கே.பாக்யராஜ், வெற்றிமாறன், விக்ரமன், இசை அமைப்பாளர் (சங்கர்) கணேஷ், நடன இயக்குனர் ரகுராம், நடிகை நமீதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஜே.வி.மீடியாவின் தயாரிப்பாளர்கள் கே.ஜே.ஜெயவேல், சுப்பிரமணி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
எங்கள் நிறுவனம் திறமையான இயக்குனர்களை கண்டுபிடித்து அறிமுகப்படுத்தி வருகிறது. எங்களால் கண்டுபிடிக்கப்பட்ட பாலாஜி மோகன் (காதலில்
சொதப்புவது எப்படி), கார்த்திக் சுப்புராம் (பீட்சா) ஆகியோர் இயக்குனர்களாக வெற்றி பெற்றுள்ளனர்.
எங்கள் நிறுவனம் மூலம் ஆண்டுக்கு இரண்டு படங்கள் தயாரிக்க முடிவு செய்திருக்கிறோம். ராஜ்குமார், நித்தினன் என்ற இரண்டு இயக்குனர்களை
அறிமுகப்படுத்துகிறோம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum