பாரதிராஜாவின் முடிவால் இயக்குனர்கள் மனக்கசப்பு?
Page 1 of 1

அரசியலிலும் சினிமாவிலும் நிரந்தர நண்பர்கள் இருக்கிறார்களோ இல்லையோ? நிரந்தர எதிரிகள் இல்லை என்பது மட்டும் நொடிக்கொரு தரம் நிரூபிக்கப்பட்டே வருகிறது. இயக்குனர் சங்க தேர்தலில் தமிழ்சினிமாவின் பிதாமகன்களில் ஒருவரான பாரதிராஜாவையே எதிர்த்து நிற்கக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தியவர் டைரக்டர் அமீர். ஆனால் அது நாகரீகமாக இருக்காது என்று சில முக்கியஸ்தர்கள் களத்தில் இறங்கி செயல்பட்டதால் கடைசி நேர மோதல் தவிர்க்கப்பட்டது.
இவ்வளவு நடந்த பின்னும் சினிமாவுக்காக ஒன்று சேர்கிறார்கள் இவ்விரு இயக்குனர்களும். அன்னக் கொடியும் கொடி வீரனும் என்ற படத்தை தயாரித்து இயக்கவிருக்கிறார் பாரதிராஜா. இதில் இனியாவும், கார்த்திகாவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் நடிகர் பார்த்திபனும் இரட்டை வேடத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென்று பார்த்திபனுக்கு எவ்வித பதிலும் சொல்லாமல் அமீரை அழைத்து போட்டோ ஷுட் நடத்தினாராம் பாரதிராஜா.
இதை கேள்விப்பட்ட பார்த்திபன் தானாகவே இந்த படத்திலிருந்து விலகியதாக அறிவித்துவிட்டார். சிம்பு படத்தில் ஜீவா நடித்ததால் நடிகர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இப்போது பார்த்திபன் கேரக்டரில் அமீர் நடித்தால் என்னாகும்? இயக்குனர்களுக்குள் மோதல் ஏற்படாது. ஏனென்றால் கொஞ்சம் பக்குவமாக சிந்திக்க தெரிந்தவர்கள்தான் இயக்குனராகவே முடியும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» பாரதிராஜாவின் 'அன்னக்கொடி'யில் ஆர்.கே.செல்வமணி!
» ரஜினி-அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்தது! – விசி குகநாதன்
» பாரதிராஜாவின் புதிய நாயகி!
» பாரதிராஜாவின் அழைப்புக்காக காத்திருக்கிறேன் : இனியா
» இஸ்லாமிய சகோதரர்களுக்கு பாரதிராஜாவின் அறிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum