சேவை வரி பிரச்னையில் நடிகர், நடிகைகளுக்கு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் ஆதரவு
Page 1 of 1
சேவை வரி பிரச்னையில் நடிகர், நடிகைகளுக்கு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் ஆதரவு
மும்பை: மத்திய அரசு விதித்துள்ள சேவை வரியை நீக்க வேண்டும் என்ற திரைத்துறையினரின் கோரிக்கைக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஆதரவு தெரிவித்துள்ளது. திரைப்பட நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு மத்திய அரசு 12.36 சதவீதம் சேவை வரி விதித்துள்ளது. இதற்கு திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். சேவை வரியை வாபஸ் பெற வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நடிகர், நடிகைகள் சென்னையில் கடந்த 7-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதில் ரஜினி உட்பட முன்னணி நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். இந்தி, தெலுங்கு, கன்னட நடிகர், நடிகைகளும் சேவை வரியை ரத்து செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தலைமையில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், செயலாளர் பி.எல்.தேனப்பன், பெப்சி செயலாளர் சிவா, வினியோகஸ்தர் சங்கத் தலைவர் அருள்பதி உட்பட 18 பிரதிநிதிகள் நேற்றுமுன்தினம் டெல்லி சென்றனர். அங்கு மத்திய வருவாய்த் துறை செயலாளர் ஸ்மித் போஸ், பட்ஜெட் குழு உறுப்பினர் ஷீலா சங்க்வான் ஆகியோரை சந்தித்துப் பேசினர். அவர்களிடன் தங்கள் கோரிக்கையை வைத்தனர். அவர்கள் இதுபற்றி ஆலோசித்து முடிவை பின்னர் அறிவிப்பதாகக் கூறியுள்ளனர். இந்நிலையில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் திரையுலகினரின் எதிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த அமைச்சகத்தின் செயலாளர் உதய்குமார் வர்மா மும்பையில் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘மத்திய அரசின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நிதி அமைச்சகத்திடம் பேச இருக்கிறோம். அந்த வரியை ரத்து செய்ய வேண்டும் என்ற நடிகர், நடிகைகளின் கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார். இந்த சேவை வரி கண்டிப்பாக நீக்கப்படுமா அல்லது குறைக்கப்படுமா என்பது பற்றி அவர் ஏதும் சொல்லவில்லை.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஸ்வரூப பிரச்னையில் கமலுக்கு நடிகர் அமிர்கான் ஆதரவு
» நடிகர் சங்கத்தில் உறுப்பினராகாத நடிகர், நடிகைகளுக்கு தடை; 15-ந் தேதி “கெடு”முடிகிறது
» நடிகர்- நடிகைகளுக்கு விருது
» மே 1-ந்தேதி திருமண வரவேற்பு: நடிகர், நடிகைகளுக்கு பிருதிவிராஜ் அழைப்பு
» தொடை தெரியும் வகையில் உடை அணிய நடிகைகளுக்கு நடிகர் சங்கம் தடை?
» நடிகர் சங்கத்தில் உறுப்பினராகாத நடிகர், நடிகைகளுக்கு தடை; 15-ந் தேதி “கெடு”முடிகிறது
» நடிகர்- நடிகைகளுக்கு விருது
» மே 1-ந்தேதி திருமண வரவேற்பு: நடிகர், நடிகைகளுக்கு பிருதிவிராஜ் அழைப்பு
» தொடை தெரியும் வகையில் உடை அணிய நடிகைகளுக்கு நடிகர் சங்கம் தடை?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum