தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மே 1-ந்தேதி திருமண வரவேற்பு: நடிகர், நடிகைகளுக்கு பிருதிவிராஜ் அழைப்பு

Go down

மே 1-ந்தேதி திருமண வரவேற்பு: நடிகர், நடிகைகளுக்கு பிருதிவிராஜ் அழைப்பு Empty மே 1-ந்தேதி திருமண வரவேற்பு: நடிகர், நடிகைகளுக்கு பிருதிவிராஜ் அழைப்பு

Post  ishwarya Fri Apr 19, 2013 12:11 pm

நடிகர் பிருதிவிராஜ்- சுப்ரியாமேனன் திருமணம் நேற்று பாலக்காடு அருகே உள்ள ரிசார்ட்டில் நடந்தது. திரையுலகினர் அழைக்கப்படவில்லை. ரகசியமாக நடந்த இத்திருமணத்தால் சக நடிகர், நடிகைகள் அதிருப்தி அடைந்தனர்.

பிருதிவிராஜ் தமிழில் மொழி, அபியும் நானும், வெள்ளித்திரை, ராவணன், நினைத்தாலே இனிக்கும், பாரிஜாதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் முன்னணி நடிகராக உள்ளார்.

இரு மொழிகளிலும் நெருக்கமான நடிகர், நடிகைகள் பலர் உள்ளனர். இயக்குனர்களும் உள்ளார்கள். அவர்களுக்கு திருமணம் பற்றி தெரிவிக்கவில்லை.

சுப்ரியாமேனன் மும்பையில் வர்த்தக செய்தி பிரிவு டி.வி. நிருபராக பணியாற்றுகிறார். சொந்த ஊர் பாலக்காடு அருகே உள்ள சந்திரநகர். பிருதிவிராஜூம் சுப்ரியாமேனனும் நான்கு வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்கள் காதல் பற்றி பத்திரிகைகளில் கிசுகிசுக்கள் வந்தன. அதை பிருதிவிராஜ் மறுத்தார். கிசு கிசுக்களில் உண்மை இல்லை என்று கூறினார். இப்போது நிரூபணமாகி உள்ளது.

திருமணத்துக்காக ஒருநாள் முன்னதாகவே இரு கார்களில் பெண், மாப்பிள்ளை வீட்டார் பாலக்காடு ரிசார்ட்டில் வந்து தங்கினர். பிருதிவிராஜூடன் அவரது தாய் மல்லிகா சுகுமாரன், சகோதரர் இந்திரஜித், அண்ணி பூர்ணிமா ஆகியோர் வந்திருந்தனர்.

திருமணத்தின்போது பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சக நடிகர், நடிகைகள் கோபத்தில் இருப்பதால் எல்லோரையும் அழைத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த பிருதிவிராஜ் முடிவு செய்துள்ளார்.

மே 1-ந்தேதி கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு நடக்கிறது. தமிழ், நடிகர், நடிகைகளுக்கும் இதில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னை நட்சத்திர ஓட்டலில் சினேகா- பிரசன்னா திருமண வரவேற்பு: நடிகர், நடிகைகளுக்கு விருந்து
» நடிகர் சங்கத்தில் உறுப்பினராகாத நடிகர், நடிகைகளுக்கு தடை; 15-ந் தேதி “கெடு”முடிகிறது
» மும்பையில் இன்று ஜெனிலியா- ரிதேஷ் திருமண வரவேற்பு
» சிறந்த நடிகர், நடிகை பிருதிவிராஜ், ரீமாவுக்கு கேரள அரசு விருது
» நடிகர்- நடிகைகளுக்கு விருது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum