முத்த காட்சிகளில் நடிப்பது ஏன்? ஆர்யா பேச்சு
Page 1 of 1

சென்னை : யுடிவி தயாரிக்கும் படம், ‘சேட்டை’. இது இந்தி ‘டெல்லி பெல்லி’ படத்தின் ரீமேக். ஆர்யா, ஹன்சிகா, அஞ்சலி, சந்தானம் நடிக்கிறார்கள். கண்ணன் இயக்குகிறார். தமன் இசை. இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இயக்குனர் பாலா தலைமையில் நடந்த விழாவில், ‘டெல்லி பெல்லி’ இந்திப் பட குழு பாடலை வெளியிட ‘சேட்டை’ படக் குழு பெற்றது. விழாவில் ஆர்யா பேசியதாவது:
‘டெல்லி பெல்லி’யை ரீமேக் செய்ய வேண்டும் என்று சொன்னபோது நிறைய யோசித்தேன். அதில் நிறைய கெட்ட வார்த்தைகள் இருந்தது. அதில் நாம் எப்படி நடிப்பது என்று தயங்கினேன். ஆனால் இயக்குனர் கண்ணன், வசனகர்த்தா ஜான் மகேந்திரன், தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோர் இணைந்து அதை தமிழ் கலாசாரத்துக்கு ஏற்றபடி மாற்றி வந்தபோது தைரியமாக நடித்தேன். நான் நடித்த கேரக்டரில் யார் வேண்டுமானாலும் நடிக்கலாம், ஆனால் சந்தானம் நடித்துள்ள கேரக்டரில் அவர்தவிர வேறு யாரும் நடிக்க முடியாது.
இந்தப் படத்தில் முத்தக் காட்சி இருக்கிறது. அந்தக் காட்சிகளை படத்தின் கதைதான் தீர்மானிக்கிறது. நான் முத்தக் காட்சியில் நடிப்பது தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்காக என்று வைத்துக் கொள்ளுங்களேன். தமிழ் சினிமாவை ஹாலிவுட்டுக்கு கொண்டு செல்ல பலர் கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் அளவுக்கு என்னால் விழுந்து புரள முடியவில்லை. அதுதான் இந்த முத்தக் காட்சிகள் என்று வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு ஆர்யா பேசினார். விழாவில் ‘டெல்லி பெல்லி’ இயக்குனர் அபினய் டியோ, கதாசிரியர் அக்ஷத் வர்மா, நடிகர் குணால் ராய் கபூர் ஆகியோர் கலந்து கொண்டனர். இயக்குனர்கள், ராஜேஷ்.எம், சுந்தர்.சி, ராதாமோகன், எல்ரெட் குமார் உட்பட பலர் பேசினார்கள். நா.முத்துக்குமார், கானா பாலா உட்பட பலர் கலந்துகொண்டனர். யுடிவி நிர்வாக இயக்குனர் சித்தார்த்ராய் கபூர், இணை தயாரிப்பாளர் தனஞ்செயன் வரவேற்றனர். இசை அமைப்பாளர் தமன், இயக்குனர் கண்ணன் நன்றி கூறினார்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கமலை போன்று ‘முத்த’ நாயகனாக விரும்பும் ஆர்யா?
» அஜீத் பேச்சு- விஷால், ஆர்யா, த்ரிஷா ஆதரவு – பாரதிராஜா எதிர்ப்பு
» தமிழ் சினிமாவை ஹாலிவுட்டுக்கு கொண்டு செல்ல முத்தக்காட்சியில் நடிக்கிறேன்: ஆர்யா பரபரப்பு பேச்சு.
» 3 வருடம் இழுத்தடிப்பார்; பாலா படத்தில் நடிக்க கதாநாயகர்கள் அச்சமா? விஷால், ஆர்யா பரபரப்பு பேச்சு
» ஆக்ஷன் காட்சிகளில் கலக்கும் கார்த்திகா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum