தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கோலிவுட் என்னை கைவிட்டது : பத்மப்ரியா வருத்தம்

Go down

கோலிவுட் என்னை கைவிட்டது : பத்மப்ரியா வருத்தம்  Empty கோலிவுட் என்னை கைவிட்டது : பத்மப்ரியா வருத்தம்

Post  ishwarya Wed Mar 13, 2013 12:10 pm

கோலிவுட் என்னை கைவிட்டுவிட்டது என்றார் பத்மப்ரியா. ‘பொக்கிஷம், ‘பட்டியல் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பத்மப்ரியா. அவர் கூறியதாவது:
தமிழில் நல்ல படங்கள் அமைந்தன. ஏற்று நடித்தேன். திடீரென்று கிளாமர் வேடத்தில் நடிக்க வந்த வாய்ப்பையும் ஏற்றேன். ஆனால், கோலிவுட் என்னை கைவிட்டுவிட்டது. கிளாமருக்கு தயாராக இருந்தும் எனக்கு வாய்ப்பு வராமல் போனது. என்னை தமிழ் சினிமா மறந்துவிட்டது என்பதைத்தான் காட்டுகிறது. இந்நிலையில் நான் நடித்துள்ள ‘தங்க மீன்கள் படம் திரைக்கு வரவுள்ளது.

அதன்பிறகு எனது நிலை மாறும் என்று நினைக்கிறேன். இதற்கிடையில் மலையாளத்தில் கைநிறைய படங்களுடன் நடித்து வருகிறேன். எம்.ஏ.நிஷாந்த் இயக்கும் படத்தில் நடிப்பதற்காக அதிக சம்பளம் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பல்வேறு மீடியாக்களில் பலவிதமான தகவல்கள் வெளியாகின. தயாரிப்பாளரிடம் நான் மன்னிப்பு கேட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. யாரிடமும் நான் மன்னிப்பு கேட்கவில்லை. இந்த பிரச்னை வெளிப்படையாக இரு தரப்பிலும் பேசி சுமுகமாக தீர்க்கப்பட்டது. இவ்வாறு பத்மப்ரியா கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum