தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வாள் சண்டை கற்கும் ஹீரோயின்கள்

Go down

வாள் சண்டை கற்கும் ஹீரோயின்கள்  Empty வாள் சண்டை கற்கும் ஹீரோயின்கள்

Post  ishwarya Wed Mar 13, 2013 12:06 pm

ஹீரோயின்கள் திடீரென வாள் சண்டை கற்பதில் பிஸியாக உள்ளனர். கோலிவுட், டோலிவுட்டில் அனுஷ்கா நடித்த ‘அருந்ததி பட வெற்றிக்கு பிறகு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் அதிகமாக உருவாக்கப்படுகின்றன. அனுஷ்காவுக்காகவே நீண்ட காலமாக ‘ருத்ரம்மாதேவி என்ற ஸ்கிரிப்டை தயாரித்து வைத்திருக்கிறார் இயக்குனர் குணசேகர். இப்படத்தில் இளவரசி வேடம் ஏற்கும் அனுஷ்கா, கடந்த 2 மாதமாக வாள் சண்டை கற்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, ‘அருந்ததி படத்தில் நடித்தபோதுகூட எனக்கு ஆக்ஷன் காட்சிகள் கிடையாது. இப்படத்தில் நிறைய வாள் சண்டை போடுகிறேன். இதற்காக கடுமையாக பயிற்சி எடுக்கிறேன்.

மேலும் சரித்திரகால படம் என்பதால் இதற்கான ஆராய்ச்சி குறிப்புகளையும் சேகரித்து அதுபற்றி அறிந்து வருகிறேன் என்றார். அதேபோல் பிரியாமணியும் ‘சாண்டி என்ற வரலாற்று படத்தில் வீராங்கனையாக நடிக்கிறார். இதற்காக இவரும் வாள் சண்டை பயிற்சியுடன், குதிரை ஏற்றபயிற்சி பெறுகிறார். அதேபோல் அல்லு அர்ஜுனுடன் நடிக்கும் அமலா பாலும் வாள் பயிற்சி பெறுகிறார். இதுபற்றி இயக்குனர் ஒருவர் கூறும்போது, ‘ஹீரோயின் முக்கியத்துவம் உள்ள கதை ஒருமுறை வெற்றி பெற்றால் தொடர்ந்து அதே பாணியில் படம் எடுக்க தொடங்குகிறார்கள். இது எல்லோருக்கும் வெற்றி தரும் என்று சொல்ல முடியாது. ஆனால் துணிச்சலான இதுபோன்ற கதாபாத்திரங்களை ஹீரோயின்கள் ஏற்பதை வரவேற்கலாம் என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum