தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருவரங்கம்(ஸ்ரீரங்கம்)- ராஜகோபுரம்

Go down

திருவரங்கம்(ஸ்ரீரங்கம்)- ராஜகோபுரம் Empty திருவரங்கம்(ஸ்ரீரங்கம்)- ராஜகோபுரம்

Post  birundha Thu Jan 17, 2013 1:25 pm


ஸ்ரீரங்கத்தின் சிறப்புமிக்க இக்கோபுரம் ராஜகோபுரம் என்று அழைக்கப்படுகிறது. இக்கோபுரம் ஆசிய துணை கண்டத்திலேயே மிகப்பெரிய கோபுரம் ஆகும். இக்கோபுரத்தை கட்டி முடிப்பதற்கு கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப்பட்டது. பதிமூன்று அடுக்குகளுடன் கூடிய இக்கோபுரம் 236 அடி உயரம் ஆகும்.

இக்கோபுரம் ஏழு பெரிய சுவர்களால் சூழப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுவர்களும் ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏழு சுவர்களும் ஏழு உலகமாக கருதப்படுகிறது. இதன் வெளிச்சுவரான ஏழாவது சுவரின் நீளம் 3072 அடியும் அகலம் 2521 அடியும் உள்ளது. இந்த 7 பிரகாரங்களுக்கு ஏழு திருவீதிகள் உள்ளன. 7-வது திருவீதி சித்திரை திருவீதி என்று அழைக்கப்படுகிறது. 6-வது திருவீதியில் உள்ள 6-வது பிரகாரம் திருவிக்கிரமன் திருவீதி என்றும் 5-வது பிரகாரம் அகலங்கன் திருவீதி என்றும் 4-வது பிரகாரம் ஆலிநாதன் திருவீதி என்றும் 3-வது திருவீதியில் உள்ள 3-வது பிரகாரம் குலசேகரன் திருவீதி என்றும் 2-வது திருவீதியில் உள்ள 2-வது பிரகாரம் ராஜ மகேந்திரன் என்றும் 1-வது திருவீதியில் உள்ள 1-வது பிரகாரம் எம்பெருமான் ஸ்ரீரங்கநாதன் கிடந்த கோலத்தில் சேவை செய்வதால் இது தர்ம வர்மன் திருச்சுற்று என்று அழைக்கப்படுகிறது.

இத்திருத்தலத்தில் பள்ளி கொண்டுள்ள பெருமாள் தினமும் சத்திய லோகம் எனப்படும் பிரம்மலோகத்தில் பிரம்ம தேவனால் பூஜிக்கப்பட்ட திருவாராதனர் பெருமாள் ஆவார். இத்திவ்ய ரெங்கநாதர் விக்கரகம் இராமர் விபீடணனுக்கு அன்பளிப்பாக கொடுத்தார். அழகான மாப்பிள்ளைத் திருக்கோலத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூரின் ஆண்டாளையும் உறையுர் கமலவல்லி நாச்சியாரையும் இங்கே ஏற்றுக்கொண்டார். கம்பர் உலகு போற்றும் கம்பராமாயணத்தை இயற்றியதும் இங்குதான். ஆழ்வார்கள் பன்னிருவரில் பதினோர் ஆழ்வார்களின் மங்களாசாசனம் பாடப் பெற்ற திவ்யதேசமாகும்.

வடக்குப் பக்கப் பரமபத வாசலில் விரஜா நதி இருப்பதாக ஐதீகம்.

தனிச்சிறப்பு

காவிரி-கொள்ளிட நதிகளின் நடுவே அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பு. வேறெங்கும் இல்லாத ஸ்ரீதன்வந்திரி பகவானின் தனி சந்நிதி இங்கு உள்ளது. இந்த ஸ்தலத்தை புலோக வைகுண்டம் என்றும் அழைப்பார்கள். ஸ்ரீரங்கநாதரை தரிசித்துவிட்டு வெளியே வரும்பொழுது தங்க விமானத்தையும் பரவாஸுதேவரையும் சேவிக்கும் வழக்கம் உள்ளது.

பங்குனி மாதம் கற்புர சேவை காலை முதலில் மட்டும் ஸ்ரீ ரங்கநாதருக்கு தீபாராதனை காட்டுவது விசேஷமாகும்.

ஒரு மாமன்னன் நெடுந்தொலைவிலிருந்து இந்த பங்குனி மாத கற்பூர சேவையை தரிசிக்க நேரம் கடந்து வந்தமையால் அவரால் தரிசிக்கமுடியவில்லை. எனினும் மீண்டும் ஒருமுறை இந்த சேவையை செய்ய கேட்டுக்கொண்டார். அவர்கள் மறுக்கவே ஓராண்டுகாலம் இத்தலத்தில் தங்கி பங்குனி மாத கற்பூர சேவையை தரிசித்து சென்றார்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum