பாம்புக்கடி! இணங்காண்பது எப்படி? அதற்கு முதலுதவி என்ன?
Page 1 of 1
பாம்புக்கடி! இணங்காண்பது எப்படி? அதற்கு முதலுதவி என்ன?
கடித்த இடம், இரண்டு பற்கள் மட்டும் சற்று இடைவெளியில் பதித்து காணப்படுகிறதா….??? கடித்த இடம் சற்று தடித்து(வீங்கி) காணப்படுகிறதா..?? கடுமையான வலி இருக்கிறதா..???
இந்த அறிகுறி விஷப்பாம்பு கடித்ததாகத்தான் இருக்கக்கூடும்…
முதலுதவி
1.இறுக்கி கட்டுப் போடவேண்டாம். இறுக்கி கட்டுப் போடுவதன் மூலம், சில சமயங்களில் விஷம் ஓரிடத்திலேயே தங்குவதால் கடித்தப்பகுதி அழுகிபோகும். லேசான இறுக்கத்துடன் கட்டுப்போடுவது நல்லது.
2.காயப்பட்ட இடத்தை ஓடும் நீரில் சோப்பு போட்டு மூன்று முறை கழுவவும்.
3.பாம்பு கடிபட்டவர் பதற்றமடையகூடாது. அவர் பதற்றமடையும்போதும் ரத்தஓட்டம் அதிகரிக்கும்.
4.பாம்பு கடித்துவிட்டால் வேகமாக நடக்க கூடாது. ஏனெனில் நாம் வேகமாக நடக்கும்போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால் நம் ரத்தத்தில் கலந்துள்ள விஷம் விரைவில் நம் உடல் முழுவதும் பரவி உயிரிழப்பை விரைவுபடுத்துகிறது
4.இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவரை தைரியமூட்டவும். எந்த அளவிற்கு அவரின் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துகின்றோமோ, அவ்வளவிற்கு அவரைக் காப்பாறுகின்றோம்.
5.பாம்பு கொத்திய இடத்தை, இதயத்தை விடத் தாழ்த்தி வைக்கவும். பாம்புக் கடிக்குள்ளானவரை படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.
6.பாம்பு கடித்துவிட்டால், பாம்புக் கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை “அட்மிட்” செய்வதில்லை. எனவே கால தாமதம் செய்யாமல், உடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.
7.இயலும் என்றால் பாம்பு பற்றிய விபரங்களைப் பெறவும். சில சமயங்களில் அடித்துக் கொல்லக்கூடிய நிலை ஏற்படலாம். எனினும் இவ்வாறு அடிக்க நேர்ந்தால், பாம்பின் தலையில் அடித்துக் கொல்ல வேண்டாம். ஏனென்றால் தலையை வைத்துத்தான் பாம்பை இனம் காணலாம். கடிபட்ட நேரம் போன்ற தகவல்கள் முக்கியமானவை.
பாம்பு கடித்தால்.. கிட்னியையும், கண்களையும் உடன் பாதிக்ககூடும். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்…
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் கணவன்/ மனைவியை இணங்காண்பது எப்படி?
» முதுகுவலியா என்ன முதலுதவி?
» முதுகுவலியா என்ன முதலுதவி?
» எட்டு வருடங்களுக்கு முன்பு எங்கள் வீட்டு மாடியில் தென்னங்கீற்று கொட்டகை தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. அதற்கு பின்னர், சுத்தம் செய்யும்போது கறுப்பு நூலால் கட்டப்பட்ட பொம்மைகளை பார்த்தோம். யாரோ சூன்யம் வைத்திருப்பதாக அஞ்சுகிறோம். என்ன செய்வது?
» பாம்புக்கடி
» முதுகுவலியா என்ன முதலுதவி?
» முதுகுவலியா என்ன முதலுதவி?
» எட்டு வருடங்களுக்கு முன்பு எங்கள் வீட்டு மாடியில் தென்னங்கீற்று கொட்டகை தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. அதற்கு பின்னர், சுத்தம் செய்யும்போது கறுப்பு நூலால் கட்டப்பட்ட பொம்மைகளை பார்த்தோம். யாரோ சூன்யம் வைத்திருப்பதாக அஞ்சுகிறோம். என்ன செய்வது?
» பாம்புக்கடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum