தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கட்டுமஸ்தான ஆண்களிடம் மயங்கும் இளம் பெண்கள்!

Go down

கட்டுமஸ்தான ஆண்களிடம் மயங்கும் இளம் பெண்கள்! Empty கட்டுமஸ்தான ஆண்களிடம் மயங்கும் இளம் பெண்கள்!

Post  meenu Tue Mar 12, 2013 2:51 pm


0


images (2)கட்டுமஸ்தான ஆண்களிடம்தான் இளம் வயதுப் பெண்கள் காதல் கொள்ள விரும்புகின்றனர். அமெரிக்க மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு அறிக்கை இப்படித் தெரிவித்துள்ளது.ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது;

காதலிக்க தேர்ந்தெடுக்கும் ஆண் எப்படியிருக்க வேண்டும் என்பதில் இளம் பெண்கள் தீர்மானமாக உள்ளனர். படிப்பு, வேலை என்பதையெல்லாம் பார்க்காமல் தோற்றப்பொலிவு மிக்க கட்டுமஸ்தான உடலைக் கொண்ட ஆணைத்தான் காதலனாகத் தேர்ந்தெடுக்கின்றனர்.

ஆண் மயில்களை நீங்கள் பார்த்தால் ஒரு உண்மை தெரியும். நீண்ட இறகுகளை திடகாத்திரமாகக் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட ஆண் மயில்களைத்தான் பெண் மயில் தேர்ந்தெடுத்து நெருங்கும்.

அப்படித்தான் தோள் பெருத்த உடல் கொண்ட ஆண்களை விரும்புகின்றனர் பெண்கள்.அதுபோல படித்த பெண்களைத்தான் ஆண்கள் பெரிதும் விரும்புகின்றனர்.தனக்குப் படிப்பு இல்லை என்றாலும் மிகவும் படித்த பெண்களைத்தான் தேர்வு செய்கின்றனர்.

இதற்கு முன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வருமானம் அதிகமுள்ள ஆண்களைத்தான் பெண்கள் விரும்புகின்றனர் என்று தெரியவந்தது.

ஆனால்,இப்போது காதலன் சம்பாதிக்கிறானா என்பது பற்றிக் கணிசமான பெண்கள் பார்ப்பதில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆண்களின் மா நிறத்தில் உள்ளவர்களைத்தான் பெண்கள் விரும்புகின்றனர். தோள் பெருத்துள்ள ஆண்கள் `காதல்’ விஷயங்களில் ஈர்ப்புள்ளவர்கள் என்று நம்புகின்றனர்.

பாலியல் ஈர்ப்பில் இழுக்கப்படும் பெண்கள் தவிர மற்ற பெண்கள் ஆண்களிடம் உஷாராகவே இருக்க விரும்புகின்றனர்.
காதல் யாருக்கும் வரும். யார் மீதும் வரும். காதலுக்குக் கண்ணில்லை என்பதற்கு திருமணமான ஆண்கள் மீது பெண்களுக்கு ஏற்படும் காதல் ஒரு உதாரணம்.

திருமணமான ஆண்களைக் காதலிக்கும் பெண்கள் படித்த, படிக்காத என எல்லா தரப்பிலும் உள்ளனர் என்பது ஒப்புக் கொள்ளக்கூடிய நிஜம். இப்படிப்பட்ட காதல்களின் பின்னணி என்ன…?

தன் அப்பாவின் குணாதிசயங்களால் ஈர்க்கப்பட்டு, அவர் மீது மிகுந்த அன்பும், பாசமும் கொண்ட பெண்கள் பலர் தனக்கு வரப்போகும் கணவனு க்கும் அதே மாதிரி குணங்கள் இருக்க வேண்டுமென எதிர்பார்ப்ப துண்டு.

இத்தகைய குணாதிசயங்களுடன் ஒரு ஆணை சந்திக்கும் பெண்,அவனையே தன் வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்ள நினைக்கிறாள். அவனுக்கு ஏற்கனவே நடந்த திருமணம் அவளுக்கு ஒரு பொருட்டாக இருப்பதில்லை.

குழந்தை உள்ளம் கொண்ட பெண்கள் இம்மாதிரி உறவுகளுக்கு சுலபமாக அடிமையாகி விடுவதுண்டு.அவளது குழந்தைத் தனங்களையும்,தவறுகளை யும் சகித்துக் கொள்ள தன்னைவிட பல வயது மூத்த ஆணை நாடுகிறாள். அவன் திருமணமானவனாக இருந்தாலும் கவலைப்படுவதில்லை.

குழந்தைப் பருவத்திலிருந்து பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கப் பெறாத பெண்கள் பருவ வயதை அடைந்ததும் அந்த அன்பும், அரவணைப்பும் திருமணமான ஒரு ஆணிடம் கிடைக்கும் போது அவனிடம் தன்னை இழக்கிறாள்.

உடல் மற்றும் இனக்கவர்ச்சிகளும் இத்தகைய உறவுகளுக்கு ஒரு காரணம். திருமணமான ஆணிடம் சாதாரண நட்பாக ஆரம்பிக்கும் இப்பழக்கம் நாள டைவில், காதலாகி, உடலளவில் நெருங்கவும் வாய்ப்புகள் அதிகம்.

விரும்பியதை அடைந்தே தீர வேண்டும் என்றும், அதற்காக எதையும் விலையாகக் கொடுக்கத் தயார் என்றும் நினைக்கும் பெண்களும் இத்தகைய உறவுகளில் திருமணமானவன் என்று தெரிந்த பிறகும் தன் சுயநலம் கார ணமாக அவன் குடும்பம் பற்றிப் பெரிதாகக் கவலைப்படுவதில்லை.

வேலைக்குச் செல்லும் பெண்களில் சிலர் திருமணமான ஆண் ஊழியர்க ளிடம் காதல் வயப்படுவதுண்டு. தன் மனைவியைப் பற்றி சதா குறை சொல்லிக் கொண்டும், விமர்சனம் செய்து கொண்டும் புலம்பும் ஆண்களை நம்பி அவர்கள் வலையில் சுலபமாக விழுந்து விடுவதுண்டு

திருமணமான ஆண்கள் தன்னைவிட வயது குறைவான பெண்களை நாடக் காரணம் திருமணத்தின் உண்மையான அர்த்தம் புரியாத வயதில் பெற்றோர் அல்லது உறவினரின் வற்புறுத்தல் காரணமாக மணம் முடிக்கும் ஆண்கள், நடுத்தர வயதை அடைந்ததும் இத்தகைய உறவுகளில் ஈடுபடுவதுண்டு.

தனக்கு வரப்போகும் பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலிருந்த ஆணுக்கு அந்த மாதிரிப் பெண் அமையாமல் போகலாம். திருமணத்திற்குப் பிறகு நடுத்தர வயதை அடையும் போது அப் படிப்பட்ட பெண்ணை சந்திக்கும் போது அவளிடம் காதல் வயப்படுகிறான்

தன்னைவிட மிகக் குறைவான வயதில் இளம் பெண்களுடன் உறவு வைத் துக் கொள்ளும் போது தானும் இளமையாக உணர்வதாக நினைக்கும் ஆண்கள் இத்தகைய உறவுகளை நாடுவதுண்டு.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum