பா.ஜனதாவில் அத்வானியின் முக்கியத்துவம் குறைப்பு?: முக்கிய முடிவுகளை எடுக்கும் குழுவில் இடம் இல்லை
Page 1 of 1

பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானி, வாஜ்பாய்க்கு அடுத்த நிலையில் இருந்து வந்தார். கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்று இருந்தால், பிரதமர் பதவி வகிக்கும் அளவுக்கு கட்சியில் அவருக்கு செல்வாக்கு இருந்து வந்தது. ஆனால், பா.ஜனதாவுக்கு தேர்தலில் வெற்றி கிடைக்கவில்லை.
மாறிவரும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில், அத்வானிக்கு கட்சியில் முக்கியத்துவம் குறைந்து குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடிக்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது. அடுத்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படும் அளவுக்கு அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.
கட்சியின் கொள்கை வழிகாட்டியான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் ஆதரவும் நரேந்திர மோடிக்குத்தான் உள்ளது. இந்த நிலையில், பா.ஜனதாவில் முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர் அதிகார குழுவில் அத்வானிக்கு இடம் அளிக்க வேண்டாம் என்ற முடிவுக்கு தற்போது ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வந்திருப்பதாக, நம்பத் தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இனி குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி, கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங், முன்னாள் தலைவர் நிதின் கட்காரி, பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களான சுஷ்மா சுவராஜ் மற்றும் அருண் ஜெட்லி ஆகியோர் மட்டுமே உயர் அதிகார குழுவில் இடம் பெறுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.
இந்த ஏற்பாடு குறித்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத், நரேந்திரமோடியுடன் சமீபத்தில் விவாதித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அத்வானி கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டு வருவதை, அவருடைய சமீபத்திய நடவடிக்கைகள் உறுதி செய்வதாக அமைந்து உள்ளன.
ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்துவதில் பா.ஜனதா தோல்வி அடைந்து விட்டதாக, அத்வானி சமீபத்தில் அதிருப்தி தெரிவித்து இருந்தார். காங்கிரசைப் போல், பா.ஜனதாவையும் மக்கள் அதிருப்தியுடன் பார்க்கத் தொடங்கி விட்டனர் என்று அவர் கருத்து தெரிவித்து இருந்தார்.
அத்வானியின் விரக்தி நிலையை இந்த கருத்துகள் பிரதிபலிப்பதாக, அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். இதற்கிடையில் நேற்று கொல்கத்தாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பா.ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங், கட்சியில் அத்வானிக்கு முக்கியத்துவம் குறைக்கப்படுவதாக வெளியான தகவல் கற்பனையானது என்று மறுத்து இருக்கிறார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பா.ஜனதாவில் அத்வானியின் முக்கியத்துவம் குறைப்பு?: முக்கிய முடிவுகளை எடுக்கும் குழுவில் இடம் இல்லை
» திருகோணமலை எல்லை நிர்ணய குழுவில் தமிழர் இல்லை'
» இறைவழிபாட்டில் சங்கு முக்கிய இடம் பெறுவது ஏன்?
» எந்திரன் படத்தின் தொடர்ச்சியை எடுக்கும் ஐடியா இல்லை – ரஜினி
» தண்டனை குறைப்பு போதாது: தி.மு.க. வெளிநடப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum