தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உடலுக்கு மிகவும் நல்ல சுவையான செட்டிநாடு கோழி சூப்!

Go down

உடலுக்கு மிகவும் நல்ல சுவையான செட்டிநாடு கோழி சூப்! Empty உடலுக்கு மிகவும் நல்ல சுவையான செட்டிநாடு கோழி சூப்!

Post  meenu Tue Mar 12, 2013 12:10 pm

1332027033Ithayapoomi_எலும்பு சூப்தேவையான பொருட்கள்

கோழி(எலும்புடன்) – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 10
சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 1
தக்காளி – 2
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 10 பல்
பட்டை, லவங்கம் – தலா 1
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
தனியாத்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை
இஞ்சி, பூண்டை உரலில் இடித்து போடவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து, இரண்டாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.

வதக்கிய கலவையை குக்கரில் போட்டு, மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கோழிக்கறி சேர்த்து நன்கு கலக்கி, 6 விசில் வரும் வரை வேக விடவும்.

பின்பு சூப்பில் கொத்தமல்லி இலையை அரிந்தும்,எலுமிச்சைசாறு பிழிந்தும் பரிமாறவும்.

இந்த சூப்பும் உடலுக்கு மிகவும் நல்லது. ஒரு முட்டை வெள்ளை கருவை நன்கு நுரை பொங்க அடித்து ஒரு கையால் ஊற்றி கொண்டே மறு கையால் கிளறியும் பரிமாறலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சுவையான செட்டிநாடு வறுத்த கோழி
» சுவையான செட்டிநாடு வறுத்த கோழி
»  சுவையான செட்டிநாடு கோழி குழம்பு
» யாகம் நடத்தும் பொழுது எழும் புகை உடலுக்கு மிகவும் நல்லது என்பது உண்மைதானா?
» என் வயது 30. நல்ல கணவர், குழந்தைகள் என்று வாழ்க்கை நன்றாகச் செல்கிறது. ஆனால், தற்சமயம் உடல்நிலை சரியில்லை. அதுவும் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்படுகிறேன். என்ன செய்ய வேண்டும், எந்தக் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று சொல்லுங்கள்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum