தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆர்யாவை இயக்குகிறாரா? மகிழ் திருமேனி மறுப்பு

Go down

ஆர்யாவை இயக்குகிறாரா? மகிழ் திருமேனி மறுப்பு  Empty ஆர்யாவை இயக்குகிறாரா? மகிழ் திருமேனி மறுப்பு

Post  ishwarya Tue Mar 12, 2013 11:45 am

சென்னை : ‘தடையறத் தாக்க’ படத்தை இயக்கியவர் மகிழ் திருமேனி. இவர் அடுத்து ஆர்யா நடிக்கும் படத்தை இயக்குவதாகத் தகவல்கள் வெளியானது. இதை ஆர்யா மறுத்துள்ளார். இதுபற்றி மகிழ் திருமேனி கூறியதாவது: என் அடுத்த படத்துக்கான ஹீரோவை நான் அறிவித்திருப்பதாக வந்திருக்கும் செய்திகளைப் பார்க்க வேடிக்கையாக இருக்கிறது. என் அடுத்தப் படத்துக்கான ஹீரோ பற்றி நான் யாரிடம் எந்த கருத்தையும் கூறவில்லை.

பிறகு எப்படி இந்த தவறான தகவல் வெளியானது என்று தெரியவில்லை. இந்த வதந்தியை உண்மை என நம்பி, கருத்து கூறியவர்களிடம் தயவு செய்து என் பெயரை இழுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் இன்னும் ஸ்கிரிப்ட் வேலையில்தான் ஈடுபட்டிருக்கிறேன். முடிந்ததும் அடுத்த படத்துக்கான அறிவிப்பை வெளியிடுவேன்.
இவ்வாறு மகிழ் திருமேனி கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum