போப்பாண்டவர் பதவி விலகுகிறார்
Page 1 of 1
போப்பாண்டவர் பதவி விலகுகிறார்
போப்பாண்டவர் பெனடிக்ட் அவர்கள் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். வத்திக்கானில் நடந்த கூட்டம் ஒன்றின் போது 85 வயதான போப்ப்பாண்டவர் இந்த அறிவிப்பை லத்தீன் மொழியில் வெளியிட்டார்.
தனது வயது முதிர்ச்சியின் காரணமாக, கடந்த சில மாதங்களாக தனது உடலும், மனமும் தனது ஆன்மீகப் பணிகளை செய்யமுடியாத அளவுக்கு மோசமடைந்து வந்ததனாலேயே தான் பதவி விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதியுடன் அவர் பதவி விலகுவார், அவருக்கு அடுத்ததாக இன்னுமொருவர் போப்பாண்டவராக தேர்ந்தெடுக்கப்படும் வரை அந்த பதவி வெற்றிடமாக இருக்கும்.
முடிந்தவரை வெகுவிரைவில் புதிய போப்பாண்டவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று வத்திக்கான் கூறியுள்ளது.
1415 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒரு போப்பாண்டவர் பதவிவிலகுவது இதுதான் முதற்தடவையாகும். செலெஸ்டைன் 5 என்னும் போப்பாண்டவர்தான் இதற்கு முன் பதவி விலகியவராவார். பொதுவாக தேர்ந்தெடுக்கப்படும் போப்பாண்டவர்கள் அவர்களது ஆயுள் வரை அந்த பதவியில் இருப்பார்கள்.
போப்பாண்டவரின் இந்த முடிவு அவரது நெருங்கிய சகாக்களுக்குக் கூட மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளதாக வத்திக்கான் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். அவருக்கு பார்கின்ஸன் நோய் இருப்பதாக சில உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.
மேற்குலகில் மதசார்பின்மை அதிகரித்து உலகின் ஏனைய பகுதிகளில் இஸ்லாம் வளர்ச்சி பெற்றுவரும் சூழலில் கத்தோலிக்க படிப்பினைகளை பாதுகாப்பவராக தன்னை போப்பாண்டவர் கருதிவந்தார். இவர் கொஞ்சம் பழமைவாதியாகவும் பார்க்கப்படுகிறார்.
முன்னைய போப்பாண்டவர் இரண்டாவது ஜோன் போல் அவர்களின் கீழ் தலைமை ஒழுக்க கட்டுப்பாட்டாளராக இவர் பணியாற்றினார்.
கருத்தடை விவகாரத்தில், உயிருக்கு ஒரு புனிதத்துவம் இருக்கிறது, அதனைக் கெடுக்ககூடாது என்று தார்மீக துல்லியத்தை வலியுறுத்தியவர் போப்பாண்டவர் பெனடிக்ட்.
ஆனால், தனது பதவிக்காலத்தில், கத்தோலிக்க திருச்சபையை ஆக்கிரமித்திருந்த சிறார் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை இவர் எதிர்கொண்டார்.
இஸ்லாம் குறித்தும் இவர் ஒரு கடும்போக்கு நிலையை எடுத்திருந்தார். முகமது நபியை கடுமையாக விமர்சித்த 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவ ஆட்சியாளரை ஆதாரம் காட்டி இவர் கூறிய கருத்துக்கள் பல முஸ்லிம்களின் மனதை புண்படச் செய்தது.
போப்பாண்டவரின் பதவி விலகல் குறித்து பல நாடுகளின் தலைவர்களும் அதிர்ச்சி வெளியிட்டிருக்கிறார்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பொது வாழ்வில் இருந்தே விலகுவதாக போப்பாண்டவர் குறிப்புணர்த்தியுள்ளார்
» திரிஷா படத்திலிருந்து விலகுகிறார் பூர்ணா
» திருடனுக்கும் சிவலோக பதவி

» தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் மஹேல ஜெயவர்தன

Permissions in this forum:
You cannot reply to topics in this forum