தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் மஹேல ஜெயவர்தன
Page 1 of 1

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் மஹேல ஜெயவர்த்தன பதவி விலகுவதாக வியாழனன்று (13.12.12) அறிவித்துள்ளார்.
இம்மாதம் ஆஸ்திரேலியாவில், அந்நாட்டுக்கு எதிராக நடைபெறும் தொடருக்குப் பிறகு அவர் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார்.
மஹேல ஜெயவர்தன அணித் தலைவர் பதவியிலிருந்து விலக விரும்பும் தனது எண்ணத்தை இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கும் தெரிவித்துள்ளார் என்பதை அதன் ஊடக மேலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் தேதி ஹொபர்ட் நகரில் நடைபெறும் ஒரு நாள் போட்டியே அவர் தலைவராக இருக்கும் கடைசி போட்டி எனவும் இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் முறையாக இலங்கை அணிக்குத் தலைமையேற்க மஹேல ஜெயவர்தன ஒப்புக்கொண்டார்.
முன்னர் தலைவராக இருந்த திலகரட்ண தில்ஷான் பதவி விலக நேர்ந்ததை அடுத்து, ஒராண்டுக்கு மஹேல தலைவராக நியமிக்கப்பட்டார்.
அடுத்த தலைவர் யார்?
ஆஸ்திரேலியப் பயணத்துக்குப் பிறகு தலைமைப் பதவியில் தொடரப் போவதில்லை என்று ஹொபர்ட் நகரில் செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர், இனி தனக்கு அவசர அழைப்பு ஏதும் வராது என்று நம்புவதாகவும் கூறினார்.
இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள்
தனக்குப் பிறகு, ஏஞ்சலோ மேத்யூஸ் தலைவராக வருவதையே தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சகலதுறை ஆட்டக்காரரான மேத்யூஸ், கடந்த இரண்டு ஆண்டுகளில் உலக அளவில் கிரிக்கெட் விளையாட்டில் தனக்கென்று ஒரு இடத்தைப் பெற்றுள்ளார் எனவும் மஹேல ஜெயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் அணியின் அடுத்த தலைவர் யார் என்பதை இலங்கை கிரிக்கெட் வாரியம் இன்னும் வெளிப்படுத்தவில்லை.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இருபதுக்கு20 அணித் தலைவர் பதவியிலிருந்து விலக மஹேல தீர்மானம்!
» ஐ.நா. பெண்கள் அமைப்பின் தலைவர் பதவி விலகுகிறார்
» 31வது சதம் அடித்தார் மஹேல!
» 31வது சதம் அடித்தார் மஹேல!
» இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர்: மஹேல ஜயவர்தன

Permissions in this forum:
You cannot reply to topics in this forum