ஆறாவது பொக்கிஷ அறையை திறக்கலாமா?
Page 1 of 1
ஆறாவது பொக்கிஷ அறையை திறக்கலாமா?
கேரள மாநிலம் பத்மநாப ஸ்வாமி கோயிலில்ஆறாவது இரகசிய அறையை அதிகாரிகள் திறப்பதில் சாமிக்கு விருப்பம் உள்ளதா என்பதை அறிய விசேட பூஜை ஒன்றை அக்கோயிலின் பூசாரிகள் ஆரம்பித்துள்ளனர்.
இக்கோயிலிலிருந்து இதுவரையில் ஐந்து இரகசிய அறைகள் திறக்கப்பட்டுள்ளன.
அவற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஏராளமான ஆபரணங்களை இந்திய உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் கணக்கெடுத்தும் மதிப்பிட்டும் வருகிறார்கள்.
ஆறாவதாக உள்ள இரகசிய அறைக்கு மற்ற அறைகளை விட மேலதிகமான பூட்டுகள் போடப்பட்டுள்ளன. அது இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.
அந்த அறையிலுள்ள பொக்கிஷங்களை பாதுகாப்பதற்கான சிறந்த வழி எது என்பது பற்றி அதிகாரிகள் ஆராய்ந்துவருகின்றனர்.
சென்ற வாரம், ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷங்களை அதிகாரிகள் கணக்கெடுக்க ஆரம்பித்தபோது அந்த கோயிலின் பக்தர்களில் ஒரு பிரிவினர் அதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். அப்படிச் செய்தால் தெய்வத்துடைய கோபப்பார்வைக்கு ஆளாக நேரிடலாம் என்று அவர்கள் எச்சரித்திருந்தனர்.
சாமிக் குற்றம்ா
ஆறாவது அறை திறக்கப்படுவதில் பத்மநாப ஸ்வாமிக்கு விருப்பம் உள்ளதா என்பதை குறி கேட்டு அறிந்துகொள்வதற்கான மூன்று நாள் ஜோஸ்ய பூஜை ஒன்றை இந்துப் பூசாரிகள் ஆரம்பித்துள்ளனர்.
இந்தப் பூஜை நடத்தி முடிக்கப்பட்ட பின்னர்தான் ஆறாவது அறை திறக்கப்பட வேண்டும் என இந்தக் கோயிலைப் பராமரித்துவரும் திருவாங்கூர் ராஜ பரம்பரையைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
"நடக்கின்ற பூஜையில் என்ன தெரியவந்தது என்பது பற்றி திருவாங்கூர் ராஜ பரம்பரையைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்திடம் சமர்ப்பிப்பார்கள். மதச்சார்பற்ற நீதித்துறைதான் அவற்றை ஆராயப்போகிறது. அறையின் சுவற்றில் பாம்புச் சின்னம் எழுதப்பட்டுள்ளதற்கு என்ன அர்த்தம் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்தான்"
வரலாற்றாசிரியர் சசிபூஷன்
இந்த அறையின் சுவற்றில் பாம்புக் குறி காணப்படுகிறது. இந்த அறையைத் திறந்தால் அது தெய்வக் குற்றமாகப் போகலாம் என்பதன் அறிகுறி அது என்று அவர்கள் கூறுகின்றனர்.
அவர்களின் கூற்றை ஆராயுமாறு நீதிமன்றம் நிபுணர்களிடம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது ஜோஸ்ய பூஜை நடப்பதை முன்னிட்டு பொக்கிஷங்களை கணக்கெடுக்கும் பணி இடைநிறுத்தப்படுமா என்பது தெளிவில்லாமல் இருக்கிறது.
சாமியின் விருப்பத்தை அறிவதற்காக குறி கேட்டு பூஜை நடத்துவது எல்லாம் நீதிமன்றத்தை அவமதிப்பதாகவும், அறிவீலித்தனமாகவும் இருப்பதாகக் கூறி, இப்பூஜைக்கு அனுமதியளிக்கப்பட்டமைக்கு பகுத்தறிவுவாதிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
நடக்கின்ற பூஜையில் என்ன தெரியவந்தது என்பது பற்றி திருவாங்கூர் ராஜ பரம்பரையைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்திடம் சமர்ப்பிப்பார்கள். மதச்சார்பற்ற நீதித்துறைதான் அவற்றை ஆராயப்போகிறது. அறையின் சுவற்றில் பாம்புச் சின்னம் எழுதப்பட்டுள்ளதற்கு என்ன அர்த்தம் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்தான் என்கிறார் வரலாற்று ஆசிரியரான சசிபூஷன்.
கற்பனையை விஞ்சும் பொக்கிஷக் குவியல்
திருவாங்கூர் மன்னர்கள் பலரால் ஏராளமான பொக்கிஷங்கள் இந்தக் கோயிலின் இரகசிய அறைகளில் சேமித்துவைக்கப்பட்டுள்ளன என்பது இப்பகுதியில் தலைமுறை தலைமுறையாக சொல்லப்பட்டுவந்த ஒரு விடயமாகும்.
ஏராளமான தங்கம், வெள்ளி, வைர வைடூரியங்கள் எல்லாமும் உள்ள இந்தப் பொக்கிஷங்களுக்கு விலை மதிப்பு போடுவதென்பது இயலாத காரியம் என வரலாற்றாசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் இந்த பொக்கிஷங்களின் மதிப்பு இருபதாயிரம் கோடி டாலர்களைத் தாண்டும் என அதிகாரிகள் தோராயமாகச் சொல்கின்றனர்.
இந்த பொக்கிஷங்களுக்கு கேரள அரசோ திருவாங்கூர் ராஜபரம்பரையினரோ இதுவரை உரிமை கோரவில்லை. இது பத்மநாப ஸ்வாமிகளுக்குச் சொந்தமான பொக்கிஷம் என்று அவர்கள் கூறிவருகின்றனர்.
இந்தப் பொக்கிஷங்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்களிடையே பெரிய விவாதம் உருவெடுத்துள்ளது. இந்த நகைகளையெல்லாம் அருங்காட்சியகத்தில் வைத்து அதில் வருகின்ற வருமானத்தை பொதுப் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்பது பலரின் கருத்தாக இருக்கிறது.
உலகிலேயே மிக அதிக செல்வம் படைத்த கோயில்களில் ஒன்றாக தற்போது இக்கோயில் திகழ்வதால், இங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பொக்கிஷ வேட்டை
» பூஜை அறையை எப்படி வைப்பது?
» பூஜை அறையை எப்படி வைப்பது?
» விநாயகர் சதுர்த்திக்கு பூஜை அறையை டக்கரா அலங்கரிக்கலாமா!!!
» வரலட்சுமி ஸ்பெஷல்!!! பூஜை அறையை எப்படி அலங்கரிக்கலாம்!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum