விநாயகர் சதுர்த்திக்கு பூஜை அறையை டக்கரா அலங்கரிக்கலாமா!!!
Page 1 of 1

vinayaka chaturthi
முதன்மை கடவுளான விநாயகரின் பிறந்த நாளையொட்டி, அனைத்து வீடுகளிலும் நல்ல சுவையான இனிப்புகளோடு, அழகான குட்டி விநாயகரை வாங்கி அலங்கரித்து, பூஜை செய்து வழிபடுவது வழக்கம். அதிலும் விநாயக பெருமானின் பிறந்த நாள் எப்போதும் ஆவணி மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் சதுர்த்தி திதியில் தான் கொண்டாடுவோம். அதுமட்டுமல்லாமல், விநாயகர் மிகவும் எளிமையானவர். அவரை மனதில் நினைத்து எந்த காரியத்தை தொடங்கினாலும் வெற்றியை நிச்சயம் அடையலாம் என்பது முன்னோர்களின் நம்பிக்கையுடன் நமது நம்பிக்கையும் கூட. அத்தகைய விநாயகரின் பிறந்த நாளான விநாயகர் சதுர்த்தியை வீட்டில் எவ்வாறெல்லாம் அலங்கரித்து கொண்டாடலாம் என்று பார்ப்போமா!!!
விநாயகர் சதுர்த்தியன்று பூஜை அறையை எப்படி அலங்கரிக்கலாம்?
* வீட்டில் உள்ள பூஜை அறையை நன்கு சுத்தமாக கழுவி விட்டு, அங்கு ஒரு மரப்பலகையை கழுவி வைக்க வேண்டும்.
* பின் அந்த பலகையின் மீது பச்சரிசியால் மாக்கோலம் போட வேண்டும். பின்னர் அதன் மேல் தலை வாழை இலையை வாங்கி வந்து, அந்த பலகையின் மீது விரிக்க வேண்டும்.
* அடுத்து மூன்று கையளவு பச்சரிசியை, அந்த இலையின் மீது பரப்ப வேண்டும். பிறகு அந்த அரிசியின் மீது வலது கையின் மோதிர விரலால் பிள்ளையார் சுழி வரைய வேண்டும்.
* பின் கடைக்குச் சென்று வாங்கி வந்த, அழகான மண்ணால் செய்யப்பட்ட விநாயகரை, அந்த அரிசியின் மீது வைக்க வேண்டும். பின்னர் பூநூலை மஞ்சளில் தடவி, விநாயகருக்கு அணிவிக்க வேண்டும்.
* அடுத்து, விநாயகருக்கு எருக்கம்பூ மற்றும் அருகம்புல் மாலையை அணிவித்து, வேண்டுமென்றால் அழகான குடையை வாங்கி அவருக்கு நிழல் தரும் வகையில் நிறுத்தலாம்.
* பின் வீட்டில் இருக்கும் ஏதேனும் தங்கம், வெள்ளி போன்றவற்றை விநாயகருக்கு முன் வைத்து, அவரது வயிற்றில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து அலங்கரிக்க வேண்டும்.
* பின்னர், வீட்டில் சுவையாக விநாயகருக்கு படைக்க செய்து வைத்துள்ள கொழுக்கட்டை, லட்டு, போளி, எள்ளுருண்டை மற்றும் பல இனிப்புகளை அவர் முன் வைத்து, தேங்காய் வாழைப்பழம் வைத்து, விளக்கேற்றி கும்பிட வேண்டும்.
மேற்கூறியவாறு பூஜை அறையை அலங்கரித்து, விநாயகரை வழிபட்டு, அனைத்து நன்மைகளையும் பெற்று, விநாயர் சதுர்த்தியை கொண்டாடி மகிழுங்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பூஜை அறையை எப்படி வைப்பது?
» பூஜை அறையை எப்படி வைப்பது?
» வரலட்சுமி ஸ்பெஷல்!!! பூஜை அறையை எப்படி அலங்கரிக்கலாம்!!!
» விநாயகர் சதுர்த்தி பூஜை
» விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் எது?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum