400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தகுதியிழந்த இரு நாடுகள்
Page 1 of 1

லண்டனில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் ஆடவருக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜமைக்கா நாட்டின் அணிகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
தகுதிச் சுற்றுப் போட்டிகளில் இந்த இருநாட்டு அணிகளும் ஓட்டத்தை நிறைவு செய்யத் தவறிவிடன.
அதிலும் குறிப்பாக இளம் வயதிலேயே போலியா நோயினால் இரு கால்களையும் இழந்து செயற்கை கால்களுடன் ஓடும் தென் ஆப்பிரிக்க வீரரான ஆஸ்கர் பிஸ்டோரியஸின் ஒலிம்பிக் கனவும் தகர்ந்து போனது.
நான்கு பேர் ஓடும் இந்தத் தொடரோட்டத்தில் இரண்டாவதாக ஓடிய தென் ஆப்பிரிக்க வீரர் அஃபெண்ட்ஸே மொகவானே, பேட்டனை( அஞ்சல் ஓட்டத்துக்கான குச்சி) ஆஸ்கர் பிஸ்டோரியஸிடம் கொடுக்க வந்தபோது, அடுத்த பாதையில் ஓடிய கென்யாவின் வின்செண்ட் கீலுவுடன் மோதி தடுக்கி விழுந்தார்.
இதன் மூலம் அந்த பேட்டன் எகிறி விழுந்து அடுத்தச் சுற்றை ஓட வேண்டிய ஆஸ்கர் பிஸ்டோரியஸ் கைக்கு கிடைக்காமல் போனது.
ஜமைக்காவை பொறுத்தவரை மூன்றாவாதாக ஓடிய ஜெர்மையின் கொன்ஸாலஸ் தசைபிடிப்பு காரணமாக தனது சுற்றை முடிக்க இயலாமல் போனது.
கென்யா அணி தொடரோட்டத்தை முடித்தாலும், தென் ஆப்பிரிக்கா செய்த மேல் முறையீடு காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டது.
இந்த தொடரோட்டத்தின் இறுதி போட்டியில் தமது அணி பங்குபெற முடியாமல் போனது தனக்கு மிகுந்த ஏமாற்றம் அளித்துள்ளது என்று ஆஸ்கர் பிஸ்டோரியஸ் கூறியுள்ளார்.
இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள அணிகளில் பஹாமாஸும் அமெரிக்காவும் ஒரே நேரத்தில்(2:58.87) ஓடி தகுதி பெற்றுள்ளன.
இதேபோல ட்ரினிடாட் மற்றும் டொபேகோ நாட்டு அணியும், பிரிட்டன் அணியும் ஒரே நேரத்தில்(3:00.38)ஓடின.
இறுதிப் போட்டி வெள்ளிக்கிழமை (10.8.12) நடைபெறவுள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஐக்கிய நாடுகள் சபையில் ஆகாஷ் டேப்ளட் பிசி

» உலக நாடுகள்
» தொடர் காய்கறி சாகுபடி
» பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum