பல், ஈறுகளில் ஏற்படும் நோய்களுக்கு
Page 1 of 1
பல், ஈறுகளில் ஏற்படும் நோய்களுக்கு
பல், ஈறுகளில் ஏற்படும் நோய்கள்:
ஈறுகள், பற்களுக்கு வலுவூட்டி ஆயுள் முழுதும் வலு இழக்காமல் பலமாக இருப்பதற்குச் சிறுவயது முதற்கொண்டே பற்களை சுத்தமாக வைத்திருத்தல் அவசியம். நவீன காலகட்டத்தில் பற்களை சுத்தமாக்க ப்ரஸையும், பற்பசையையும் நம்பியுள்ளோம். பெரும்பாலும் பற்களைப் பாதுகாக்கவும், நோய் அணுகாமல் இருப்பதற்கும் தனிகவனம் செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு முறையும் உணவு உண்ட பின்பு வாய் நிறைய தண்ணீர் கொண்டு மிக வேகமாகக் கொப்பளித்து உமிழ வேண்டும்.
ஈறுகளை விரலைக் கொண்டு அழுத்தித் தேய்ப்பது ஈறுகளுக்கு பலத்தைக் கொடுக்கும்.
குறி குணங்கள்:
வீக்கங்கள் ஏற்படுதல்
பற்களில் வலி உண்டாதல்
பல் நரம்புகளில் கட்டிகள்
ஈறு நோயினால் பல்லுக்கும், நரம்புக்கும் இடையே செயல் இழப்பு ஏற்படுவதால் பல் கறுத்துவிடுதல்.
மருந்து 1: திரிபலாதி சூரணம்
தேவையானப் பொருட்கள்:
கடுக்காய்த் தோல்= 50 கிராம்.
நெல்லி வற்றல்= 50 கிராம்.
தான்றிக்காய்= 50 கிராம்.
செய்முறை:
அனைத்துப் பொருட்களையும் வெயிலில் காயவைத்து, இடித்து, பொடியாக்கி, சலித்தெடுத்து வைத்துக் கொள்ளவும்.
உபயோகிக்கும் முறை:
சூரணத்தை ஒரு தேக்கரண்டி அளவு ஒரு டம்ளர் வெந்நீருக்குள் போட்டு ஒரு நாளைக்கு 2, 3 முறை வாய் கொப்பளிக்கவும்.
தீரும் நோய்கள்:
ஈறுகளில் சீழ் பிடித்தல், கட்டிகள் முதலியவை குணமாகும்.
மருந்து 2:
தேவையானப் பொருட்கள்:
கடுக்காய்த் தோல்= 100 கிராம்
படிகாரம்= 10 கிராம்
செய்முறை:
இரண்டையும் தனித்தனியாக இடித்து, பொடியாக்கி, சலித்தெடுத்து ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
உபயோகிக்கும் முறை:
இதை ஒரு சிட்டிகை எடுத்து, ஈறுகளில் நன்றாகத் தேய்க்க வேண்டும்.
தீரும் நோய்கள்:
ஈறு கரைதல், சீழ் பிடித்தல் நீங்கும்.இதைச் சிறிது எடுத்து, தேன் கலந்து பல் தேய்ப்பதாலும் பற்கள் வலுவாகும்.
மருந்து 3:
தேவையானப் பொருட்கள்:
ஆலமரப்பட்டை (காய்ந்தது)= 100 கிராம்
மருதம் பட்டை= 100 கிராம்
சாம்பிராணி= 10 கிராம்
படிகாரம்= 10 கிராம்
கற்பூரம்= 5 கிராம்
செய்முறை:
அனைத்துப் பொருட்களையும் நன்றாக இடித்து, பொடியாக்கி கொள்ளவும்.

ஈறு கரைதல், சீழ் வடிதல், ரத்தம் வருதல், ஈறுகளில் தோன்றும் கட்டி, புண் ஆகியவை குணமாகும். பற்களும் வலுவாகும்.
மருந்து 4:
தேவையானப் பொருட்கள்:
கருவேலம் பட்டை= 100 கிராம்
மாவிலை (காய்ந்தது)= 100 கிராம்
கடுக்காய்த் தோல்= 30 கிராம்
கிராம்பு= 100 கிராம்
வெங்காரம் (பொரித்தது)= 10 கிராம்
சாம்பிராணி= 10 கிராம்
லவங்கப்பட்டை= 20 கிராம்
மிளகு= 50 கிராம்
சுக்கு= 20 கிராம்
செய்முறை:
அனைத்துப் பொருட்களையும் வெயிலில் காயவைத்து, இடித்து, பொடியாக்கி சலித்தெடுத்து கொள்ளவும்.
உபயோகிக்கும் முறை:
தினசரி இதைக் கொண்டு பல் தேய்த்து வர வேண்டும்.
தீரும் நோய்கள்:
ஈறு வீக்கம், பல்வலி, ரத்தம் அல்லது சீழ்வடிதல் நீங்கிப் பல் உறுதியாகும்.
மருந்து 5:
தேவையானப் பொருட்கள்:
மாதுளம் விதை=60 கிராம்
சுக்கு= 20 கிராம்
மிளகு= 20 கிராம்
திப்பிலி= 20 கிராம்
ஏலக்காய்= 10 கிராம்
லவங்கப்பட்டை= 10 கிராம்
ஜாதிக்காய்= 10 கிராம்
சர்க்கரை= 240 கிராம்
செய்முறை:
சர்க்கரையைத் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் வெயிலில் காயவைத்து, இடித்து, பொடியாக்கி சலித்தெடுத்து கொள்ளவும். சர்க்கரையைக் கலந்து இந்த சூரணத்தில் எடைக்கு 8 பாகம்(3.120 கிராம்) அடுப்புக்கரி எடுத்து நன்றாக இடித்து, பொடித்து, சலித்து இத்துடன் கலந்து வைத்துள்ள பொடிகளைக் கலந்து கொள்ளவும்.
உயோகிக்கும் முறை:
தினசரி இதைக் கொண்டு பல் தேய்த்து வரவும்.
தீரும் நோய்கள்:
ஈறு கரைதல், சீழ்வடிதல், பல் ஆட்டம் இவை நீங்கும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» பல் ஈறுகளில் வலியா?
» கல்லீரல் நோய்களுக்கு
» கல்லீரல் நோய்களுக்கு
» வெயில் கால நோய்களுக்கு
» கோடை கால நோய்களுக்கு எளிமையான மருந்துகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum